வடக்கு ஆளுநரின் ஏற்பாட்டில் போர் வீரர்களின் தினம்....
வடக்கு மாகாண ஆளுநரின் ஏற்பாட்டில் போர் வெற்றி தினத்திற்கு பதிலாக போர் வீரர்கள் தினம் நேற்றைய தினம் யாழ்ப்பாணம் பலாலி பாதுகாப்பு படைத்தலைமையகத்தில் நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்வு பலாலியில் அமைந்துள்ள இராணுவத்தின் நினைவு தூபியில் நடைபெற்றுள்ளது. இந்த போர் வீரர் தின நிகழ்வில் பிரதம விருந்தினராக வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே கலந்து கொண்டு இராணுவ வீரர்களின் நினைவுத் தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.
இந்த நிகழ்வில் வடக்கு மாகாண அரச அதிகாரிகள் மற்றும் முப்படையினர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். அத்துடன் மதத்தலைவர்கள் யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதி மற்றும் யாழ்.பிரதிப் பொலிஸ் மா அதிபர் உட்பட வடமாகாண அரசாங்க அதிப ர்கள், அரச உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு இராணுவ வீரர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.
மேற்படி நிகழ்வில் பயங்கரவாதத்தை தோற்கடித்த போர் வீரர்கள் என இராணுவத்தினரால் அறிவிக்கப்பட்டு கௌரவமும் வழங்கப்பட்டது.
முப்படையினரும் பொலிஸாரும் அணி வகுப்பு மரியாதை வழங்கி, போர் வீரர்கள் தினம் அனுஷ்டிக்கப்பட்டதோடு, நிகழ்வில் கலந்து கொண்டிருந்த பிரதம செயலர் உட்பட அனைவருக்கும் இராணுவத்தினர்; நினைவு பரிசில்களையும் வழங்கியிருந்தனர்.
கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத் தினை வெற்றிகொண்ட இராணுவ வீரர்களின் நினைவாகவும் உயிரிழந்த இராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் போர் வீரர் தினம் இராணுவத்தினரால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வின் காலத்தில் இந்த தினம் போர் வெற்றி தினமாக கொழும்பில் மட்டும் அனுஷ்டிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் காலத்தில் நாட் டின் ஒன்பது மாகாணங்களிலும் போர் வீரர்கள் தினம் என பிரகடனப்படுத்தப்பட்டு அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிட த்தக்கது.

Reviewed by Author
on
May 11, 2017
Rating:

No comments:
Post a Comment