அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்ட வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் தங்கும் விடுதிகள் திறந்துவைப்பு-(படம்)




ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் 21 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட மன்னார் மாவட்ட வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் நிறைவேற்றுப் பொறியியலாளர் விடுதியும், தொழில் நுற்ப  உத்தியோகத்தர்களுக்கான தனிநபர் விடுதிகளுமாக மூன்று தங்கும் விடுதிகள் நேற்று வெள்ளிக்கிழமை(26) மதியம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
இதன் போது அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன், மாகாண வீதி அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் டி.சிவராஜலிங்கம் , வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் ஏ.நீக்கிலாப்பிள்ளை ,சிரேஸ்ட சட்டத்தரணி இ.கயஸ் பெல்டானோ , மோட்டார் போக்குவரத்து திணைக்கள மாகாண பணிப்பாளர் கே.பிரபாகர மூர்த்தி , வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் பிரதம பொறியியலாளர்கள், மன்னார் மாவட்ட நிறைவேற்றுப் பொறியியலாளர், மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.






மன்னார் மாவட்ட வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் தங்கும் விடுதிகள் திறந்துவைப்பு-(படம்) Reviewed by Author on May 27, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.