பருப்புக்கடந்தான் பிரதான வீதியில் 10 நாட் களுக்கு மேலாக வீழ்ந்து கிடக்கும் மரம்-அகற்ற முன் வராத அதிகாரிகள்.(படங்கள் )
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பருப்புக்கடந்தான் பிரதான வீதியில் கடந்த 10 நாற்களுக்கு மேலாக பாரிய மரம் ஒன்று முறிந்து வீழ்ந்து காணப்படுகின்ற போதும் உரிய அதிகாரிகள் குறித்த மரத்தை அகற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளாமையினால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக விசனம் தெரிவித்துள்ளனர்.
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவு,பருப்புக்கடந்தான் கிராம அலுவலகர் பிரிவில் உள்ள குறித்த வீதியிலே கடந்த 10 நாற்களுக்கு மேலாக மரம் முறிந்து காணப்படுகின்றது.
இதனால் குறித்த வீதியூடான போக்குவரத்துக்கள் பாதிப்படைந்துள்ள நிலையில் அருகில் உள்ள பொது மாயானத்தினூடாக போக்குவரத்துக்கள் இடம் பெற்று வருகின்றது.
குறித்த பொது மாயானத்தில் உள்ள கல்லரைகள் மீது வாகனங்கள் ஏறிச் செல்லுவதினால் கல்லரைகள் சேதமடைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்தள்ளனர்.
குறித்த வீதி ஆர்.டி.டி.க்கு சொந்தமானதாகவும்,மாந்தை மேற்கு பிரதேசச் சபைக்கு உற்பட்டதாக காணப்படுகின்ற போதும் குறித்த மரத்தை அகற்றி போக்குவரத்தை சீர் செய்ய இது வரை அதிகாரிகள் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவு,பருப்புக்கடந்தான் கிராம அலுவலகர் பிரிவில் உள்ள குறித்த வீதியிலே கடந்த 10 நாற்களுக்கு மேலாக மரம் முறிந்து காணப்படுகின்றது.
இதனால் குறித்த வீதியூடான போக்குவரத்துக்கள் பாதிப்படைந்துள்ள நிலையில் அருகில் உள்ள பொது மாயானத்தினூடாக போக்குவரத்துக்கள் இடம் பெற்று வருகின்றது.
குறித்த பொது மாயானத்தில் உள்ள கல்லரைகள் மீது வாகனங்கள் ஏறிச் செல்லுவதினால் கல்லரைகள் சேதமடைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்தள்ளனர்.
குறித்த வீதி ஆர்.டி.டி.க்கு சொந்தமானதாகவும்,மாந்தை மேற்கு பிரதேசச் சபைக்கு உற்பட்டதாக காணப்படுகின்ற போதும் குறித்த மரத்தை அகற்றி போக்குவரத்தை சீர் செய்ய இது வரை அதிகாரிகள் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

பருப்புக்கடந்தான் பிரதான வீதியில் 10 நாட் களுக்கு மேலாக வீழ்ந்து கிடக்கும் மரம்-அகற்ற முன் வராத அதிகாரிகள்.(படங்கள் )
Reviewed by NEWMANNAR
on
May 31, 2017
Rating:

No comments:
Post a Comment