பல ஆயிரம் தமிழ் மக்கள் உயிரிழக்க ஐ.நாவும் காரணம்? வடக்கு முதல்வர் ஆதங்கம்...
ஐ.நா சபை திறமையாக செயற்பட்டிருந்தால் போரின் இறுதி கட்டத்தில் பல்லாயிரக்கணக்காண தமிழ் மக்கள் உயிரிழந்திருக்க மாட்டர்கள் என்பதை ஐ.நா அபிவிருத்தி செயற்பாட்டிற்கான அதிகாரியிடம் சுட்டிக்காட்டியிருந்ததாக வடமாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் ஐ.நா அபிவிருத்தி செயற்பாட்டிற்கான அதிகாரிக்கும் இடையில் இன்று காலை விஷேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றிருந்தது.
இந்த சந்திப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,
ஐ.நா சபையானது மாகாண அரசுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளாது மத்திய அரசாங்கத்துடன் மட்டும் தொடர்புகளை வைத்துகொண்டு செயற்படுகிறார்கள். இதனை ஏற்று கொள்ள முடியாது.
ஏற்கனவே மத்திய அரசாங்கம் மாகாணத்தை புறந்தள்ளி தாம் நினைத்ததை செயற்படுத்தி வருகின்றது. எனவே அதனை ஏற்க முடியாது. இனிவரும் காலத்திலாவது ஐ.நா சபை மாகாண அரசுடனும் தொடர்புகளை பேணவேண்டும்.
2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி கட்ட யுத்த காலப்பகுதியில் ஐ.நா சிறப்பாக செயற்பட்டு மத்திய அரசின் செயல்பாட்டில் தலையிட்டிருந்தால் பல்லாயிரக்கணக்கான பொது மக்களை காப்பாறியிருக்கலாம்.
எவ்வாறாயினும், இனிவரும் காலங்களிலாவது அவ்வாறான ஒரு தவறை ஐக்கிய நாடுகள் சபை விடக்கூடாது என்பதை அதிகாரிகளிடம் வலியுறுத்தியிருந்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பல ஆயிரம் தமிழ் மக்கள் உயிரிழக்க ஐ.நாவும் காரணம்? வடக்கு முதல்வர் ஆதங்கம்...
Reviewed by Author
on
May 03, 2017
Rating:

No comments:
Post a Comment