சமூக,விஞ்ஞான போட்டியில் 2ஆம் இடத்தை பெற்றுக்கொண்ட நானாட்டான் மகா வித்தியாலய மாணவி-படம்
அகில இலங்கை ரீதியில் இடம் பெற்ற பெற்ற 501 தொடக்கம் 1000 வரையிலான மாணவர் தொகையை கொண்ட தமிழ் பிரிவு பாடசாலைகளுக்கு இடையே இடம் பெற்ற சமூக ,விஞ்ஞான போட்டியில் 2ஆம் இடத்தையும் ,அகில இலங்கை ரீதியில் 3 மொழிக்குமான சகல பாடசாலைகளுக்குமான சமூக விஞ்ஞான போட்டியில் 3 ஆம் இடத்தினையும் மன்னார் நானாட்டான் மகா வித்தியாலய மாணவி பெற்றுக்கொண்டுள்ளார்.
குறித்த போட்டியில் கலந்து கொண்ட மன்னார் நானாட்டான் மகா வித்தியாலயத்தில் தரம் 9 இல் கல்வி கற்கும் மாணவி செலஸ்டின் அஜென்டினா என்பவரே சமூக ,விஞ்ஞான போட்டியில் 2ஆம் இடத்தையும் , அகில இலங்கை ரீதியில் 3 மொழிக்குமான சகல பாடசாலைகளுக்குமான சமூக விஞ்ஞான போட்டியில் 3 ஆம் இடத்தினையும் பெற்று பாடசாலைக்கும்,நானாட்டான் கோட்டத்திற்கும் ,மன்னார் வலயத்திற்கும் ,வட மாகாணத்திற்கும் பெருமை தேடிக்கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
-மன்னார் நிருபர்-

சமூக,விஞ்ஞான போட்டியில் 2ஆம் இடத்தை பெற்றுக்கொண்ட நானாட்டான் மகா வித்தியாலய மாணவி-படம்
Reviewed by Author
on
June 15, 2017
Rating:

No comments:
Post a Comment