36 பேர் பலி...பிலிப்பைன்ஸ் தலைநகரில் பயங்கர துப்பாக்கி சூடு
பிலிப்பைன்ஸ் தலைநகரான மனிலாவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 36 பேர் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
தலைநகர் மனிலாவில் Resorts World Manila என்ற சொகுசு கேளிக்கை விடுதி ஒன்று இயங்கி வருகிறது.
இந்த விடுதிக்குள் நேற்று நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர் ஒருவர் புகுந்து துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளான்.
இக்காட்சியை கண்டு வாடிக்கையாளர்கள் அனைவரும் அலறியடித்து ஓடியுள்ளனர்.
ஆனால், அனைவரையும் சிறைபிடித்த மர்ம நபர் அவர்களை ஒரு அறையில் வைத்து பூட்டி தீவைத்துள்ளான்.
மேலும், கேளிக்கை விடுதியில் இருந்த ஹொட்டலிலும் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளான்.
இச்சம்பத்திற்கு பின்னர் ஓர் அறைக்கு சென்ற நபர் படுக்கையில் படுத்து ஒரு போர்வையை எடுத்து போர்த்தியுள்ளான். பின்னர், தனக்கு தானே தீவைத்துக்கொண்டு தற்கொலை செய்துள்ளான்.
இத்தாக்குதலுக்கு பின்னர் கேளிக்கை விடுதிக்குள் புகுந்த பொலிசார் 36 சடலங்களை மீட்டுள்ளனர்.
இவர்களில் பலர் தீப்புகையை சுவாசித்து பலியானதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இது ஒரு தீவிரவாத தாக்குதல் எனக் கூறப்பட்டாலும் அதற்கான ஆதாரங்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.
மேலும், துப்பாக்கி சூடு நடத்திய நபர் மனநலம் குன்றியவரா என்ற கோணத்திலும் தற்போது பொலிசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
36 பேர் பலி...பிலிப்பைன்ஸ் தலைநகரில் பயங்கர துப்பாக்கி சூடு
Reviewed by Author
on
June 02, 2017
Rating:

No comments:
Post a Comment