எத்தனை வருடம் வாழ்வீர்கள்? எளிதில் கண்டுபிடிக்கும் தொழில்நுட்பம்....
ஒருவர் எத்தனை ஆண்டு காலம் உயிர் வாழப் போகிறார் என்பதை கண்டுபிடிக்க ஒரு புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை (Artificial intelligence - AI) ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
தெற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்டு பல்கலைகழகத்தின் ஆராய்ச்சியாளர்கள், இந்த புது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளார்கள்.
இந்த தொழில்நுட்பமானது, மனித உறுப்புகளை சி.டி.ஸ்கேன் மூலம் புகைப்படம் எடுத்து வைத்து அதை ஆராய்ந்து, அவர் இன்னும் எத்தனை ஆண்டுகாலம் உயிருடன் இருப்பார் என்பதை கணக்கிட்டு கூறுகிறது.
இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் முடிவை மருத்துவர்கள் அளிக்கும் முடிவுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் அது 69 சதவிகிதம் துல்லியமாக இருந்தது தெரியவந்தது.
இந்த ஆராய்ச்சிக் கண்டுபிடிப்புக் குழுவில் உள்ள லுக் ஓக்டென்-ரேனர் கூறுகையில்,
ஒருவரின் உடலில் வருங்காலத்தில் ஏற்படும் மாற்றங்களை கணிப்பது மிகவும் உபயோகமானது. ஏனெனில் அதற்கு சிகிச்சையளிக்க மருத்துவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
அதிலும் ஒருவர் எவ்வளவு ஆண்டுகாலம் வாழ்வார், என்பதை மருத்துவர் கண்டுபிடிப்பது மிகவும் அரிதான ஒன்று.
அந்த வகையில் ஒருவரின் உடலுக்குள் ஒவ்வொரு உறுப்பின் ஆரோக்கியத்தை கண்டுபிடிக்க, இந்த தொழில்நுட்பம் உதவியாக இருக்கும்.
எங்களின் இந்த ஆராய்ச்சி மருத்துவ பட பகுப்பாய்வுத் துறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் ஒரு புதிய வாயிலை திறந்துள்ளது.
வருங்காலத்தில் இந்த தொழில்நுட்பம் நோய்களை வரும் முன்னபே கண்டறிந்து, அதற்கான சிகிச்சையை முன்கூட்டியே அளிக்க உதவும் என்று கூறியுள்ளார்.
எத்தனை வருடம் வாழ்வீர்கள்? எளிதில் கண்டுபிடிக்கும் தொழில்நுட்பம்....
Reviewed by Author
on
June 17, 2017
Rating:
Reviewed by Author
on
June 17, 2017
Rating:


No comments:
Post a Comment