ஐந்து வருட ஐபிஎல் போட்டிக்கு ஸ்பான்சர் பணம் எவ்வளவு தெரியுமா?
இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் ஏனைய அணிகளைச் சேர்ந்த வீரர்கள் பங்குபெற்று விளையாடி வருகின்றனர்.
இத்தொடருக்கு ஆரம்பத்தில் பெரிய அளவிலான வரவேற்பு இல்லை என்றாலும், அடுத்தடுத்து நடந்த தொடரால் மிகப் பெரிய லீக் தொடராக மாறியது.
இதனால் ஸ்பான்சரை பெறுவதில் பெரும் போட்டி நிலவி வந்தது. தொடர் ஆரம்பித்த 2008-2012-வரை கட்டுமான நிறுவனமான டி.எல்.எப். குரூப் டைட்டில் ஸ்பான்சராக இருந்தது.
அதன்பின் ஐந்து வருடத்திற்கு 396 கோடி ரூபாய் என பெப்சி நிறுவனம் டைட்டில் ஸ்பான்சரை பெற்றது.
இதைத் தொடர்ந்து 2014-2015-ல் டைட்டில் ஸ்பான்சரை விவோ நிறுவனம் பெற்றது. அதன் காலம் இவ்வருடத்துடன் முடிவடைகிறது.
இந்நிலையில் 2018 முதல் 2022 அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான டைட்டில் ஸ்பான்சராக மீண்டும் விவோ நிறுவனத்துக்கே வழங்கப்பட்டுள்ளது.
இதற்காக அந்நிறுவனம், 2,199 கோடி ரூபாய் செலவிடுகிறது. இது கடந்த வருடத்தை ஒப்பிடும்போது, 554 சதவிகிதத்தில் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐந்து வருட ஐபிஎல் போட்டிக்கு ஸ்பான்சர் பணம் எவ்வளவு தெரியுமா?
Reviewed by Author
on
June 28, 2017
Rating:

No comments:
Post a Comment