விண்ணில் பறந்த சாகச விமானங்கள்: கண்டுகளித்த வடகொரியா ஜனாதிபதி....
அணு ஆயுத சோதனைகள் மூலம் அண்டை நாடுகளான தென் கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா நாடுகளுக்கு அச்சுறுத்தல் விடுத்து வரும் வடகொரியா தற்போது போர் விமான சாகசங்களை மேற்கொண்டுள்ளது.
எதிரியின் போர் விமானங்களை இலக்கு வைத்து அழிக்ககூடிய போர் விமானங்கள், குண்டு வைத்து அழிக்ககூடிய விமானங்கள் உள்ளிட்டவை இந்த சாகச நிகழ்ச்சியில் பங்கேற்றன.
ஒளி போக்குவரத்து விமானங்கள் மற்றும் இராணுவ ஹெலிகாப்டர்கள் தங்கள் திறமையைக் காட்டுவதை அந்நாட்டு ஜனாதிபதி கிம் ஜாங் உன் கண்டு ரசித்துள்ளார்.
அந்நாட்டு உள்ளூர் நேரப்படி காலை 9.00 மணியளவில் இந்த சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.
Sukhoi Su-25 Frogfoot, MiG-29, MiG-23, MiG-21, and MiG-15 ஜெட் விமானங்கள் போன்றவை இதில் பங்குபெற்றுள்ள என தென்கொரியாவை சேர்ந்த செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளன.
இந்த சாகச நிகழ்வுகளை வடகொரியா ஜனாதிபதி 'கிம் ஜாங் உன்' கண்டு ரசிப்பது போன்ற புகைப்படங்கள் வடகொரிய ஊடகங்கள் மூலம் தற்போது வெளியாகியுள்ளன.
ஏற்கெனவே கொரிய தீபகற்ப பகுதியில் போர் பதற்றம் அதிகரித்துக் காணப்படும் இச்சூழலில் வடகொரியாவின் இம்மாதிரியான செயல்கள் ஜப்பான், தென்கொரியா போன்ற நாடுகளின் பதற்றத்தை அதிகரித்துள்ளன.
விண்ணில் பறந்த சாகச விமானங்கள்: கண்டுகளித்த வடகொரியா ஜனாதிபதி....
Reviewed by Author
on
June 06, 2017
Rating:

No comments:
Post a Comment