அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் தபால் ஊழியர்கள் இரண்டாவது தடவையாக அடையாள வேலை நிறுத்தத்தை ஆரம்பிப்பு-(படங்கள் )

ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தொடர்ச்சியான வேலை நிறுத்தப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மன்னார் அஞ்சல் அலுவலக பணியாளர்களும் அடையாள வேலை நிறுத்தத்தை இன்று செவ்வாய்க்கிழமை(27) காலை முதல் ஆரம்பித்துள்ளனர்.

-மூன்று அம்சக்கோரிக்கைகளை முன் வைத்து நாடு முழுவதும் உள்ள தபால் ஊழியர்கள் ஏற்கனவே திட்டமிட்ட படி நேற்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தை ஆரம்பித்துள்ளனர்.

-நுவரெலியா,கண்டி,காலி ஆகிய தபாற் காரியலாயங்களை உள்ளாச பயணத்துறைக்கு பயண்படுத்தும் முயற்சிக்கு எதிர்ப்புத்தெரிவித்தும்,கொழும் பு பிரதான தபால் காரியாலய கட்டிடத்தில் மீண்டும் தபால் காரியாலயத்தை ஆரம்பிக்காமை , ஊழியர் சட்ட மூலத்தை திருத்தி நடமுறைப்படுத்தாமை உள்ளிட்ட நிர்வாகத்தில் உள்ள பல்வேறு பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையிலே குறித்த அடையாள வேலை நிறுத்தம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

-குறித்த கோரிக்கைகளை முன் வைத்து கடந்த 13 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 48 மணி நேர வேலை நிறுத்தத்தை மேற்கொண்டு கைவிட்டிருந்தனர்.

-எனினும் தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையிலே தொடர்ச்சியான வேலை நிறுத்தப்போராட்டத்தினை இன்று செவ்வாய்க்கிழமை(27) நாடு முழுவதும் உள்ள தபால் ஊழியர்கள் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்து.

-ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தொடர்ச்சியான வேலை நிறுத்தப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மன்னார் பிரதான அஞ்சல் அலுவலகம் மற்றும் மன்னாரில் உள்ள உப அஞ்சல் அலுவலகங்கள் போன்றவற்றில் கடமையாற்றுகின்ற பாணியாளர்கள் இன்று செவ்வாய்க்கிழமை(27) காலை முதல் அடையாள வேலை நிறுத்தத்தை ஆரம்பித்துள்ளனர்.
இதன் காரணமாக மன்னாரில் உள்ள அஞ்சல் அலுவலகங்கள் மூடப்பட்ட நிலையில் காணப்படுகின்றது.

-இதனால் பல்வேறு தேவைகளுக்காக அஞ்சல் அலுவலகங்களுக்குச் செல்லும் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.



மன்னாரில் தபால் ஊழியர்கள் இரண்டாவது தடவையாக அடையாள வேலை நிறுத்தத்தை ஆரம்பிப்பு-(படங்கள் ) Reviewed by NEWMANNAR on June 27, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.