ஆசிர்வாதம் செய்யும் ரோபோ பாதிரியார்.....
ஜேர்மனியின் Wittenberg நகரத்தில் உள்ள தேவாலயம் ஒன்று ரோபோ பாதிரியாரை அறிமுகம் செய்துள்ளது.
தேவாலயத்திற்கு வருகை தரும் பக்தர்களுக்கு ஆசிர்வாதம் வழங்கும் ரோபோ பாதிரியாருக்கு ப்ளெஸ்யூ-2 (BlessU-2) என பெயர் சூட்டியுள்ளனர்.
இதிலுள்ள தொடுதிரை மூலம் என்ன ஆசிர்வாதம் வேண்டும் என தெரிவு செய்ய வேண்டும்.
இதன்பின்னர் கைகளை தூக்கி கொண்டு புன்னகையுடன் பைபிள் வசனத்தை உச்சரித்தபடி, "God bless and protect you" என ஆசிர்வாதம் வழங்குகிறது.
ஒரு இயந்திரத்திடம் ஆசிர்வாதம் பெறுவதா என ஒரு சாரார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் பலரும் இது வித்தியாசமான அனுபவமாக இருந்தது என தெரிவித்துள்ளனர்.
ஆசிர்வாதம் செய்யும் ரோபோ பாதிரியார்.....
Reviewed by Author
on
June 01, 2017
Rating:

No comments:
Post a Comment