அண்மைய செய்திகள்

recent
-

மனித கழிவுகள் கலந்த உணவுகளை கைதிகளுக்கு கொடுத்த அதிகாரிகள்: வெனிசுலா சிறையில் பயங்கரம்...


வெனிசுலாவில் கலகத்தில் ஈடுபட்டதாக கூறி கைதான நபர்களுக்கு மனித கழிவுகளை கலந்த உணவை வலுக்கட்டாயமாக சாப்பிட வைத்ததாக புகார் எழுந்துள்ளது.

வெனிசுலாவில் ஜனாதிபதி Nicolas Maduro பதவிவிலக வலியுறுத்தி கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து பெரும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் காவல்துறை மற்றும் ராணுவத்தின் அடக்குமுறைக்கு இதுவரை 74 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் கலவரங்களில் ஈடுபட்ட பொதுமக்களில் 1,300 பேர் காயமடைந்துள்ளதாக மனித உரிமைகள் ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மட்டுமின்றி இந்த விவகாரம் தொடர்பில் நாடு முழுவதில் இருந்தும் இதுவரை 3,000 பேர் கைதாகியுள்ளனர்.

இந்த நிலையில் Valencia பகுதியில் அமைந்துள்ள உணவு பதப்படுத்தும் நிறுவனம் ஒன்றை சூறையாடியதாக கூறி பொதுமக்களில் 40 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதனையடுத்து 12 மணி நேரம் கடந்த பின்னர் ராணுவ நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர்படுத்தியுள்ளனர்.


இதில் 19 பேரை விசாரணை ஏதுமின்றி Guarico பகுதியில் அமைந்துள்ள கட்டுப்பாடுகள் நிறைந்த சிறைக்கு அனுப்பியுள்ளனர்.

எஞ்சியவர்களை நிபந்தனை ஜாமினில் விடுவித்துள்ளனர். விடுவிக்கப்பட்ட நபர்கள் சிறையில் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை வெளியிட்டது தற்போது கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கைதான நபர்களை பொலிசார் கொடூரமாக தாக்கியுள்ளனர். சில ஆண்களை பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தியுள்ளனர். மட்டுமின்றி அவர்களுக்கு அளிக்கப்பட்ட பாஸ்தா உணவில் மனித கழிவுகளை கலந்து சாப்பிட கட்டாயப்படுத்தியுள்ளனர்.

மறுத்த கைதிகளை கொடூரமாக தாக்கியதுடன், வலுக்கட்டாயமாக அவர்களது வாயில் உணவை திணித்துள்ளனர். சிலர் பொலிசாரின் கண்மூடித்தனமான தாக்குதலுக்கு பயந்து அந்த உணவை சாப்பிட்டுள்ளனர்.

இதனைடையே Guarico சிறையில் அடைக்கப்பட்டுள்ள 19 பேரின் நிலைமை குறித்து இதுவரை தகவல் எதுவும் வெளியாகவில்லை.

சிறை அதிகாரிகளே உணவில் மனித கழிவுகளை கலந்து சாப்பிட வைத்துள்ள சம்பவம் மனித உரிமைகள் ஆணையத்தால் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

மனித கழிவுகள் கலந்த உணவுகளை கைதிகளுக்கு கொடுத்த அதிகாரிகள்: வெனிசுலா சிறையில் பயங்கரம்... Reviewed by Author on June 27, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.