சிறந்த பந்துவீச்சாளர்கள் பட்டியலில் 3 ஆம் இடம் பிடித்த இலங்கை வீரர் ஹெராத்....
டெஸ்ட் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தர வரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) வெளியிட்டுள்ளது.
பந்து வீச்சு தர வரிசையில் இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா (898 புள்ளி) முதலிடத்தை தக்கவைத்துக்கொண்டார். ரவிச்சந்திரன் அஸ்வின் (865 புள்ளி) இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.
இலங்கையின் ஹெராத், அவுஸ்திரேலியாவின் ஹேசல்வுட், இங்கிலாந்தின் ஆண்டர்சன் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
ஆல்ரவுண்டர் பட்டியலில் , முதல் இடத்தில் வங்கதேச வீரர் சாகிப் அல் ஹசன் உள்ளார்.
இந்தியாவின் ஜடேஜா, அஸ்வின், இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களில் இருக்கின்றனர்.
பேட்ஸ்மேன்கள் தர வரிசையில் அவுஸ்திரேலியாவின் ஸ்மித், இங்கிலாந்தின் ரூட், நியூசிலாந்தின் வில்லியம்சன், இந்தியாவின் புஜாரா, கோலி ஆகியோர் முதல் 5 இடங்களில் இருக்கின்றனர்.
சிறந்த 5 பேட்ஸ்மேன்கள்
அவுஸ்திரேலிய வீரர் ஸ்மித் - 941 புள்ளிகள் பெற்று முதல் இடம்
இங்கிலாந்து வீரர் ரூட் - 888 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடம்
நியூசிலாந்து வீரர் வில்லியம்சன் - 880 புள்ளிகள் பெற்று மூன்றாம் இடம்
இந்திய வீரர் புஜாரா - 846 புள்ளிகள் பெற்று நான்காம் இடம்
இந்திய வீரர் கோஹ்லி - 818 புள்ளிகள் பெற்று ஐந்தாம் இடம்
சிறந்த 5 பந்துவீச்சாளர்கள்
இந்திய வீரர் ஜடேஜா - 898 புள்ளிகள் பெற்று முதல் இடம்
இந்திய வீரர் அஸ்வின் - 865 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடம்
இலங்கை வீரர் ஹெராத் - 854 புள்ளிகள் பெற்று மூன்றாம் இடம்
இலங்கை வீரர் ஹேசல்வுட் - 828 புள்ளிகள் பெற்று நான்காம் இடம்
இங்கிலாந்து வீரர் ஆண்டர்சன் - 814 புள்ளிகள் பெற்று ஐந்தாம் இடம்
சிறந்த 3 ஆல் - ரவுண்டர்
வங்கதேச வீரர் சாகிப் - 431 புள்ளிகள் பெற்று முதல் இடம்
இந்திய வீரர் ஜடேஜா - 422 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடம்
இந்திய வீரர் அஸ்வின் - 413 புள்ளிகள் பெற்று மூன்றாம் இடம்
சிறந்த பந்துவீச்சாளர்கள் பட்டியலில் 3 ஆம் இடம் பிடித்த இலங்கை வீரர் ஹெராத்....
Reviewed by Author
on
July 11, 2017
Rating:

No comments:
Post a Comment