மன்னாரில் அமைக்கப்படும் பாலங்களில் குவாரி டஸ்டா ?
மன்னாரில் தற்போது ஜப்பானிய அரசாங்க மானியத்திட்டங்களின் கீழ் ஆறு (6)
மண்டைக்கல்லாறு, பாலியாறு, அறுகுழியாறு (வங்காலை), அரிப்பு, மறிச்சுக்கட்டி மற்றும்செட்டிக்குளம் பாலங்கள் புதிதாக நிர்மாணிக்கப்படுகின்றன.
இதே திட்டத்தின் கீழ்யாழ்ப்பாணத்திலும் இரு பாலங்கள் அமைக்கப்படுவதாக அறியக்கிடைக்கின்றது.
அவ்வகையில் மன்னாரில் ஏனைய இடங்களிலும் அதி முக்கியமாக A32 வீதியிலும்இப்பாலக்கட்டுமானங்கட்கான ஆயத்தங்கள் துரித கதியில் இடம் பெற்று வருகின்றன.
இப்போது இதிலுள்ள மக்கள் சாதாரணமாக அறியாத ஆனாலும் கட்டாயம் அறிய வேண்டிய விடயம் யாதெனில் பாலக்கட்டுமான பணிகளில் கொங்கிரீட் கலவைக்கு ஆற்றுமண்ணே பயன்படுத்தப்படும். வடமாகாணம் முழுவதற்கும் மன்னாரே குறித்த ஆற்றுமணலை விநியோகிப்பதில் உயிர் நாடியாக விளங்கி வருகின்றது.
மன்னாரில் இதற்கேற்றால் போல் அமைந்த இயற்கை சூழலும் போக்குவரத்திற்கான வசதிகளும் இதை மேலும் ஆதரிக்கின்றன. யாழ்ப்பாண கட்டுமானங்கள் இவ்வாற்று மணலுக்கு மன்னாரையே நம்பியுள்ளன.
இவ்வாறான சூழ்நிலையில் மேற்குறித்த திட்டத்தின் கீழ் மன்னாரில் இடம் பெறும் பாலக்கட்டுமானங்களுக்காக மணலுக்கு பதிலாக முழுவதும் விலைகுறைவான கல்குவாரிகளை உடைக்கும் போது கிடைக்கும் குவாரி டஸ்ட் எனப்படும் துாளே பயன்படுத்தப்படுகின்றது. இது போன்று 100 வீதம் குவாரி டஸ்ட் ஐ பயன்படுத்தி இலங்கையில் இதுவரை எத்திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை என்பதுடன் அவை ஆய்வுக்கட்டத்திலேயே தங்கியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் அமைக்கப்படுகின்ற இரு பாலங்களும் ஆற்று மணலை பயன்படுத்தி அமைக்கப்படுகின்ற போது மன்னாரில் போதிய மணல் காணப்படுகின்ற போது ஏன் ஆய்வு நிலையில் உள்ள ஒரு விலை
குறைவான மூலப்பொருளை வைத்து பாலங்களை அமைக்க தென்னிலங்கை ஒப்பந்தக்காரர்கள் தலைப்படுகின்றனர் என்பது வினாவாகவேயுள்ளது ?
அல்லது
மன்னாரில் அமைக்கப்படும் பாலங்கள் ஓர் பரிசோதனைக்கூடத்து எலிகள் போலஅமைக்கப்பட்டு அதில் மன்னார் மக்களின் உயிர்கள் பணயம் வைக்கப்படுகின்றதா?
எனும் வினாவையும் எழுப்ப வேண்டிய கட்டாயம் எமக்கு காணப்படுகின்றது.
மேலும் வீதி அதிகார சபையின் (R.D.A) கட்டுப்பாட்டின் கீழேயே குறித்த கட்டுமானங்கள் ஒப்பந்ததாரர்களால் கட்டப்படுவதால் மன்னார் மக்களின் நலன் கருதி குறித்த குவாரி டஸ்டின் கட்டுமான தரம் குறித்த பக்கச்சார்பற்ற விசாரணைகளை நடாத்தி மக்கள் நலனில் இலங்கை அரசு கொண்டுள்ள பேரார்வத்தை வீதி அதிகார சபை காப்பாற்ற வேண்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன் மன்னாரில் மண் போதுமான அளவு காணப்படுகின்ற போது ஏன் வேற்று மூலம் ஒன்றை பயன்படுத்த வேண்டும் எனும் வினா எழுவதை யாராலும் மறுக்கவோ அல்லது மறைக்கவோ முடியாது.
இன்று கூட (10-07- 2017) குவாரி டஸ்டை பயன்படுத்தி கட்டுமான ஆயத்தங்கள்
நடப்பதாக நாம் அறிகின்றோம். விரைவாக செயற்படாது விடின் விபரீதத்தை தடுப்பது இயலாததாகிவிடும்.
இச்செய்தியை மன்னார் சார் அரசியல்வாதிகள் பலரிடம் முறையிட்டும் இன்று வரை பதிலோ அல்லது செயலோ இல்லாத காரணத்தால் மக்கள் முன்னிலையில் வெளிப்படுத்துகின்றோம். மன்னாரை காப்பாற்ற ஆர்வமுள்ளவர்கள் இவ்விடயத்தில்
அக்கறை காட்டுமாறு தாழ்மையாக வேண்டுகின்றோம். மிக விரைவில் தொழினுட்ப ஆதாரங்களுடனும் நிர்வாக தகவல்களுடனும் மக்கள் அனைவரையும் திறந்த அரங்கில் சந்திப்போம்.

Reviewed by NEWMANNAR
on
July 10, 2017
Rating:

No comments:
Post a Comment