மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை வைத்தியர்கள் 24மணி நேர பணிப்பகிஸ்கரிப்பு:-நோயாளர்கள் பாதிப்பு
மாலபே தனியார் வைத்திய கல்லூரியை பொதுவுடமையாக்குமாறு கோரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மீண்டும் பணிப்பகிஸ்கரிப்புப் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள நிலையில் குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை வைத்தியர்கள் 24 மணி நேர பணிப்பகிஸ்கரிப்பினை இன்று செவ்வாய்க்கிழமை(25) காலை 8 மணி முதல் ஆரம்பித்துள்ளனர்.
மாலபே தனியார் வைத்திய கல்லூரியை அரச உடமையாக்குமாறு கோரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் கடந்த மாதம் தொடர்ச்சியாக பல தடவைகள் பணிப்பகிஸ்கரிப்பினை மேற்கொண்டு வந்தனர்.
-இதனால் நோயாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று திங்கட்கிழமை மீண்டும் கொழும்பில் கூடிய அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழுக் கூட்டத்தில் தொடர்ச்சியான பணிப்பகிஸ்கரிப்பை முன்னெடுக்க முடிவு செய்துள்ளனர்.
-இதற்கமைவாக இன்று செவ்வாய்க்கிழமை காலை 8 மணிமுதல் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் வைத்தியர்கள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வரும் மக்கள் நீண்ட நேரம் காத்திருந்ததோடு, தூர இடங்களில் இருந்து வந்த மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.
மாலபே தனியார் வைத்திய கல்லூரியை அரச உடமையாக்குமாறு கோரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் கடந்த மாதம் தொடர்ச்சியாக பல தடவைகள் பணிப்பகிஸ்கரிப்பினை மேற்கொண்டு வந்தனர்.
-இதனால் நோயாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று திங்கட்கிழமை மீண்டும் கொழும்பில் கூடிய அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழுக் கூட்டத்தில் தொடர்ச்சியான பணிப்பகிஸ்கரிப்பை முன்னெடுக்க முடிவு செய்துள்ளனர்.
-இதற்கமைவாக இன்று செவ்வாய்க்கிழமை காலை 8 மணிமுதல் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் வைத்தியர்கள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வரும் மக்கள் நீண்ட நேரம் காத்திருந்ததோடு, தூர இடங்களில் இருந்து வந்த மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை வைத்தியர்கள் 24மணி நேர பணிப்பகிஸ்கரிப்பு:-நோயாளர்கள் பாதிப்பு
Reviewed by NEWMANNAR
on
July 25, 2017
Rating:

No comments:
Post a Comment