கனடாவில் காணாமல் போன தமிழர்!
கனடாவின் Stouffville பகுதியில் தமிழர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக யோர்க் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 18ஆம் திகதி முதல் இந்த நபர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தள்ளனர்.
61 வயதான பொன்ராசா நாகராஜா என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார். கடந்த 18ஆம் திகதி காலை நடைபயிற்சியில் ஈடுபடுவதற்காக சென்றுள்ள நிலையில் அவர் வீடு திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
அவர் தனது நாயுடன் வழமையாக நடை பயற்சிக்கு செல்வார். எனினும் அன்றைய தினம் அவர் தனியாகவே சென்றுள்ளார்.
அவரது குடும்பத்தினர் மற்றும் பொலிஸார் அவரது நலனுக்காக அக்கறை காட்டுகின்றனர். மேலும் இவர் தொடர்பில் தகவல் அறிந்தால் தகவல் தருமாறு பொதுமக்களிடம் பொலிஸார் உதவி கோரியுள்ளனர்.
நாகராஜா தெற்காசிய நாட்டை சேர்ந்தவராகும். ஐந்து அடி, நான்கு அங்குல உயரமான ஒருவராகும். கறுப்பு நிற முடியுடையவர். பழுப்பு நிற கண்கள் மற்றும் சாம்பல் நிறை ஆட்டு தாடியை கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.
அவர் தொடர்பில் அறிந்தால் 1-866-876-5423, மற்றும் 7541 இந்த இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு யோர்க் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கனடாவில் காணாமல் போன தமிழர்!
Reviewed by Author
on
July 21, 2017
Rating:

No comments:
Post a Comment