மன்னாரில் பிரபல வெதுப்பகமொன்றில் விற்பனை செய்யப்பட்ட பாணில் கழிவுப்பொருள்......
மன்னார் மாவட்டத்தில் உள்ள பிரபல வெதுப்பகமொன்றில் விற்பனை செய்யப்பட்ட பாண் ஒன்றில் கழிவுப்பொருள் இருந்துள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
மன்னார் நகரப்பகுதியில் அமைந்துள்ள வெதுப்பகமொன்றில் இன்று (08.07.2017) பொதுமகன் ஒருவர் பாண் ஒன்றினை கொள்ளவனவு செய்துள்ளார். அதனை எடுத்து சென்று சாப்பிட முற்பட்ட சமயத்தில் பாணினுள் கழிவுப்பொருள் ஒன்றினை அவதானித்துள்ளார்.
கோபமடைந்த பொதுமகன் அந்த வெட்டுப்பாண் துண்டுகளை குறித்த வெதுப்பகத்தில் திருப்பிக் கொடுத்துள்ளார் அந்த கழிவுப்பொருளை கொண்டுள்ள பாண்துண்டுகளை பெற்றுக்கொண்ட எந்த வித மறுப்புமின்றி உரிமையாளர் புதிதான பாண் ஒன்றினை வழங்கியுள்ளார் அந்த பணை வாங்கமறுத்த பொதுமகன் இனியாவது தவறுகள் செய்யாமல் அதுவும் மக்களின் உணவுவிடையத்தில் துப்பரவினையும் சுகாதாராத்தினையும் பேணுங்கள் வெறுமனே பணம் சம்பாதிப்பதில் குறிக்கோளாய் இருக்காதீர்கள் பசியுடன் சாப்பிட எடுக்கும் போது இப்படியிருந்தால் அந்தநேரத்தில் வயிறும் மனமும் படும் வேதனையை உங்களால் உணரமுடியுமா.....
மக்களின் வயிற்றில் அடிக்காதீர்கள்....
இவ்வாறு அவதானமின்றி வெதுப்பகங்கள் தங்களது உற்பத்தி பொருற்களை விற்பனை செய்துவருகின்றனர்.
பொதுமக்களின் நலனில் கருத்தில் கொள்ளாது தங்களது லாப நோக்கத்துடன் செயற்படும் உற்பத்தி நிலையங்கள் மீது உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளுவார்களா?

மன்னாரில் பிரபல வெதுப்பகமொன்றில் விற்பனை செய்யப்பட்ட பாணில் கழிவுப்பொருள்......
Reviewed by Author
on
July 08, 2017
Rating:

No comments:
Post a Comment