அண்மைய செய்திகள்

recent
-

இணையபக்கங்களை ஆஃப்லைனில் பயன்படுத்துவது எப்படி..



ஸ்மார்ட்போன்களில் சர்ஃபிங் செய்யும் போது பல்வேறு தகவல்கள் மற்றும் செய்திகளை படிப்போம். எனினும் சில சமயங்களில் நேரமின்மை காரணமாக மிகப்பெரிய செய்திகளை வாசிக்க முடியாது. இவ்வாறான செய்திகளை தவறாமல் படிக்க புக்மார்க்கிங் செய்யும் வசதி வழங்கப்படுகிறது.

எனினும் சில தளங்களில் இதுபோன்ற செய்திகள் பல்வேறு காரணங்களுக்காக சிறிது நேரத்திலேயே காணாமல் போய்விடும். இதனால் இணையபக்கங்களை சேமித்து வைப்பது பின்னர் படிக்க பயனுள்ளதாக இருக்கும்.

கூகுளின் குரோம் பிரவுசரில் ஆஃப்லைனில் படிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்த வசதியை கொண்டு முழு இணையபக்கத்தையும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் சேமித்து கொள்ளலாம். இதேபோன்ற அம்சம் மொசில்லா, ஒபெரா மற்றும் ஒபெரா மினி பிரவுசர்களில் வழங்கப்பட்டுள்ளது.

இதுதவிர பாக்கெட், இன்ஸ்டாபேப்பர் மற்றும் பேப்பர்ஸ்கேன் போன்ற சேவைகளும் கிடைக்கிறது.  

கூகுள் குரோம், ஒபெரா மற்றும் ஒபெரா மினி

கூகுளின் குரோம் செயலியில் இணையபக்கங்களை ஆஃப்லைனில் படிக்க எளிய வழிமுறை அமலாகியுள்ளது. இதை இயக்க இணையபக்கம் சென்றதும், பக்கத்தில் உள்ள மூன்று புள்ளிகளை கிளிக் செய்து, டவுன்லோடு செய்யக் கோரும் பட்டனை கிளிக் செய்ய வேண்டும். இனி இணையபக்கம் டவுன்லோடு ஆகி ஸ்மார்ட்போனில் பதிவு செய்யப்படும்.

ஸ்மார்ட்போனில் பதிவு செய்யப்பட்ட இணையபக்கங்களை இயக்க மூன்று புள்ளிகளை கிளிக் செய்து, டவுன்லோட்ஸ் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். இனி ஆஃப்லைனில் பதிவு செய்யப்பட்ட இணையபக்கங்களை படிக்கும் போது நீங்கள் ஆஃப்லைனில் வாசிப்பதை உணர்த்தும் ஐகான் திரையில் தெரியும்.

ஒபெரா மற்றும் ஒபெரா மினி செயலிகளில் இணையபக்கத்திற்கு சென்று மூன்று புள்ளிகளை கிளிக் செய்து ஆஃப்லைன் வசதியை குறிக்கும் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். ஆஃப்லைனில் பதிவு செய்யப்பட்ட பக்கங்களை வாசிக்க வலதுபுறத்தில் உள்ள ஒபெரா ஐகானை கிளிக் செய்து ஆஃப்லைன் பேஜஸ் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

PDF போன்று பதிவு செய்தல்

இணையபக்கங்களை ஆஃப்லைனில் வாசிக்க அவற்றை PDF ஃபைலாக பதிவு செய்யலாம். கூகுள் குரோமில் இதை செய்ய இணையபக்கத்தின் மூன்று புள்ளிகளை கிளிக் செய்து பிரின்ட் செய்யக் கோரும் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

இனி பேப்பர் அளவு, பக்கங்ளின் எண்ணிக்கை உள்ளிட்டவற்றை பதிவு செய்து PDF ஐகானை கிளிக் செய்ய வேண்டும். அடுத்து எங்கு சேமிக்க வேண்டும் என்ற ஃபோல்டரை தேர்வு செய்தால் இணையபக்கம் PDF வடிவில் சேமிக்கப்படும். இதனை ஸ்மார்ட்போனின் ஃபைல் மேனேஜர் மூலம் இயக்க முடியும்.

பாக்கெட் செயலி

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் இணையபக்கங்களை சேமிக்க பாக்கெட் சிறந்த சேவையாக இருக்கிறது. இணையபக்கங்களை PDF வடிவில் சேமித்து வைத்தால் அதனை ஸ்மார்ட்போன்களில் மட்டுமே பயன்படுத்த முடியும். மேலும் இவ்வாறு பதிவு செய்யப்படும் இணையபக்கங்கள் தவறுதலாக அழிந்து விட்டால் அவற்றை மீண்டும் இயக்க முடியாது. இதுபோன்ற சமயங்களில் நமக்கு உதவிகரமாக இருக்கும் சேவை தான் பாக்கெட்.

பாக்கெட் செயலியை பயன்படுத்த பிளே ஸ்டோர் சென்று சைன்-அப் செய்ய வேண்டும். இதை செய்ததும் கூகுள் குரோம், ஒபெரா அல்லது மொசில்லா பிரவுசர் சென்று மூன்று புள்ளிகளை கிளிக் செய்து, ஷேர் செய்யக் கோரும் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். அடுத்து பாக்கெட் ஆப்ஷனை கிளிக் செய்தால் உங்களது கணக்கில் இணையபக்கம் சேர்க்கப்படும்.

பாக்கெட் செயலி தற்சமயம் ஆண்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ். இயங்குதளங்களில் கிடைப்பதோடு, இதன் டெஸ்க்டாப் பதிப்பும் உள்ளது. இதனால் அனைத்து இணையபக்கங்களும் கிளவுட் ஸ்டோரேஜில் சேமிக்கப்படும். ஆண்ட்ராய்டில் சேமித்தாலும், ஐபோன் மற்றும் ஐபேட் போன்ற சாதனங்களில் கிடைக்கும். இதனை getpocket.com தளம் சென்று பிரவுசர்களிலும் இயக்க முடியும்.

இணையபக்கங்களை ஆஃப்லைனில் பயன்படுத்துவது எப்படி.. Reviewed by Author on July 24, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.