எரியக்கூடிய பனியில் இருந்து இயற்கை வாயு உற்பத்தி: தென் சீனக்கடலில் சீனா சாதனை
தென் சீனக்கடல் பகுதி, எண்ணெய், இயற்கை எரிவாயு வளமிக்க பகுதி ஆகும். இங்கு சீனா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. செயற்கை தீவுகளை அமைத்து, ராணுவ மயமாக்கி வருகிறது. ஆனால் தென் சீனக்கடல் பகுதியில் தங்களுக்கும் பங்கு இருப்பதாக சொல்லி, பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா, புருனை, தைவான் ஆகிய நாடுகள் உரிமை கொண்டாடி வருகின்றன.
இந்த நிலையில் சர்ச்சைக்குரிய தென் சீனக்கடல் பகுதியில் சோதனை ரீதியில், எரியக்கூடிய பனி என்று அழைக்கப்படக்கூடிய மீத்தேன் ஹைட்ரேட்டில் இருந்து இயற்கை எரிவாயுவை சீனா சோதனை ரீதியில் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது.
தென்கிழக்கு சீன நகரான சுகாய் கடற்கரையில் 60 நாட்கள் நிறுவப்பட்டிருந்த துளையிடும் அமைப்பு, 3 லட்சத்து 9 ஆயிரம் கன மீட்டர் இயற்கை எரிவாயுவை உற்பத்தி செய்துள்ளது.
நிலம் மற்றும் வளத்துறை அமைச்சகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இதுபற்றி அந்த அமைச்சகம் கூறுகையில், “20 ஆண்டுகள் முடிவற்ற முயற்சிகள் செய்ததின் விளைவாக சீனா, கோட்பாடு, தொழில் நுட்பம், பொறியியல் மற்றும் புதுமையான உபகரணங்கள் வரலாற்று முன்னேற்றத்தை அடைந்துள்ளன” என்று குறிப்பிட்டுள்ளது.
தண்ணீர் படிகங்களுக்கு இடையே எரியக்கூடிய பனியான மீத்தேன் உள்ளதாகவும், இது சீனாவுக்கு புதிய எரிவாயு ஆதாரமாக அமைந்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
2016-20 காலகட்டத்தில் இயற்கை எரிவாயுவை தீவிரமாக அபிவிருத்தி செய்வதற்கு சீனா உறுதி கொண்டுள்ளது.
சீனாவைப்போன்று ஜப்பானும் கடந்த மே மாதம் மீத்தேன் ஹைட்ரேட்டில் இருந்து இயற்கை எரிவாயு உற்பத்தி செய்துள்ளதாக அறிவித்தது.
எரியக்கூடிய பனியில் இருந்து இயற்கை வாயு உற்பத்தி: தென் சீனக்கடலில் சீனா சாதனை
Reviewed by Author
on
July 30, 2017
Rating:

No comments:
Post a Comment