இந்திய கிரிக்கெட் மகளிர் அணியில் சாதித்து காட்டிய தமிழ் பெண்....
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவி மிதாலி ராஜ் (35) மகளிர் கிரிக்கெட் உலகின் லேடி சச்சின் என இன்று அழைக்கப்படுகிறார்.
இதுவரை 183 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 6028 ஓட்டங்களை குவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் ஒருநாள் போட்டிகளில் 6 ஆயிரம் ஓட்டங்களை எட்டிய முதல் வீராங்கனை என்ற பெருமையும் மிதாலி வசமே உள்ளது.
இவ்வளவு பெருமைகளை கொண்டுள்ள மிதாலி ஒரு தமிழர் என பலருக்கும் தெரியாது.
ஆம், மிதாலியின் தந்தை துரைராஜின் சொந்த ஊர் தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் ஆகும்.
துரைராஜ் - லீலாராஜ் ஆகியோருக்கு மகளாக பிறந்த மிதாலி பெற்றோருடன் ஆரம்ப காலத்தில் ராஜஸ்தானின் ஜோத்புரில் வளர்ந்தார்.
பின்னர், மிதாலியின் குடும்பம் ஆந்திராவுக்கு இடம் மாறியது. தற்போது மிதாலி வீட்டில் எல்லோரும் தமிழ் தான் பேசுவார்கள். மிதாலிக்கும் தமிழ் நன்றாகப் பேசத் தெரியும்.
தமிழ்நாட்டு வீரங்கனைகளுடன் தமிழிலேயே பேசும் மிதாலி சென்னை வரும் போதும் அனைவரிடமும் தமிழிலேயே பேசுகிறார்.
சிறுவயதில் பரதநாட்டியம் கற்றுவந்த மிதாலி பிறகு தந்தையின் ஊந்துதலால் கிரிக்கெட்டிலும் ஆர்வம் செலுத்தினார்.
9 வயது முதல் கிரிக்கெட் விளையாட்டு, மிதாலியின் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்க ஆரம்பித்தது.
இந்திய கிரிக்கெட் அணிக்கு தெரிவு செய்யப்பட்ட சமயத்தில் பரத நாட்டியமா அல்லது கிரிக்கெட்டா என முடிவெடுக்க வேண்டிய சூழல் மிதாலிக்கு ஏற்பட்டது.
இதையடுத்து பரதநாட்டியத்திலிருந்து விலகிய மிதாலி, தனது 17வது வயதில் இந்திய அணிக்கு தேர்வானார்.
பிறகு தனது கடும் உழைப்பால் இந்திய அணியின் தலைவியாக உயர்ந்துள்ள மிதாலி இன்று பல சாதனைகளுக்கு சொந்தகாரராக திகழ்கிறார்.
இந்திய கிரிக்கெட் மகளிர் அணியில் சாதித்து காட்டிய தமிழ் பெண்....
Reviewed by Author
on
July 16, 2017
Rating:

No comments:
Post a Comment