துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த மெய்ப்பாதுகாவலருக்கு யாழ்.பல்கலை மாணவர்கள் அஞ்சலி...
நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த மெய்ப்பாதுகாவலருக்கு யாழ்.பல்கலைக்கழகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
குறித்த அஞ்சலி நிகழ்வுகள் யாழ்.பல்கலைக்கழகத்தில் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து நல்லூரில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
இந்த சம்பவத்தில் 15 வருடங்களாக நீதிபதியின் மெய்ப்பாதுகாவலராக பணியாற்றிய சிலாபத்தைச் சேர்ந்த 51 வயதாகிய சரத் ஹேமச்சந்திர என்பவர் உயிரிழந்திருந்தார்.
இவரது இந்த தியாகத்திற்காக யாழ்.பல்கலைக்கழக மாணவர்களால் அஞ்சலி நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளன.
இதன்போது ஹேமச்சந்திரவின் புகைப்படத்திற்கு மலர் தூவி, மெழுகுவர்த்திகள் ஏற்றி மாணவர்கள் தமது அஞ்சலியை செலுத்தியுள்ளனர்.
மேலும், நீதிபதியை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை தாம் வன்மையாக கண்டிப்பதாகவும், மெய்ப்பாதுகாவலரின் குடுப்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதாகவும் மாணவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த மெய்ப்பாதுகாவலருக்கு யாழ்.பல்கலை மாணவர்கள் அஞ்சலி...
Reviewed by Author
on
July 24, 2017
Rating:

No comments:
Post a Comment