புதிய முஸ்லிம் குடியேற்றத்துக்கு அடையாளப்படுத்தப்பட்ட கூழாமுறிப்பு வனப்பகுதிக்கு விஷமிகளால் தீ வைப்பு
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் கூழாமுறிப்பு பகுதியில் புதிய முஸ்லிம் குடியேற்றம் அமைப்பதற்க்கென அடையாளப்படுத்தப்பட்ட வனப்பகுதிக்கு அடையாளம் தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டுள்ளது.குறித்த சம்பவம் நேற்று(19) இரவு நடைபெற்றுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
குறித்த பகுதியில் வனங்களை அழித்து புதிய முஸ்லிம் குடியேற்றம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த வாரம் இளைஞர்கள் ஒன்றுகூடி கண்டன ஆர்பாட்டத்தினை குறித்த பகுதியில் மேற்கொண்டிருந்தனர்.அதாவது நேர்த்தியாக உருவாக்கப்பட்ட வனங்கள் நிறைந்த குறித்த பிரதேசம் இந்த திட்டமிட்ட குடியேற்றம் அமைக்கப்படுவதால் அழிந்துபோகும் அபாயத்துக்குள்ளாகும் எனவும் இயற்கை இருப்பை இல்லாதொழிக்கும் நடவடிக்கையில் எவர் ஈடுபட்டாலும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் கோரிக்கையினை முன்வைத்து ஆர்பாட்டத்தினை மேற்கொண்டிருந்தனர்.
அந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்று சில நாட்களே ஆன நிலையில் குறித்த பிரதேசத்தில் ஆயிரக்கணக்கான தேக்குமர கன்றுகள் நடப்படுள்ள பிரதேசம் விஷமிகளால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது .இந்த தீ வைப்பால் 10 ஏக்கருக்கு மேற்பட்ட வனங்கள் எரிந்து நாசமாகியுள்ளது.இது திட்டமிட்டு சில விஷமிகளால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாக இருக்குமென பிரதேச மக்கள் ஆத்திரம் வெளியிட்டனர்.

அந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்று சில நாட்களே ஆன நிலையில் குறித்த பிரதேசத்தில் ஆயிரக்கணக்கான தேக்குமர கன்றுகள் நடப்படுள்ள பிரதேசம் விஷமிகளால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது .இந்த தீ வைப்பால் 10 ஏக்கருக்கு மேற்பட்ட வனங்கள் எரிந்து நாசமாகியுள்ளது.இது திட்டமிட்டு சில விஷமிகளால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாக இருக்குமென பிரதேச மக்கள் ஆத்திரம் வெளியிட்டனர்.
புதிய முஸ்லிம் குடியேற்றத்துக்கு அடையாளப்படுத்தப்பட்ட கூழாமுறிப்பு வனப்பகுதிக்கு விஷமிகளால் தீ வைப்பு
Reviewed by NEWMANNAR
on
July 20, 2017
Rating:

No comments:
Post a Comment