முதலமைச்சரை தூக்கி எறிகின்ற நிலைக்கு எமது தலைமை உள்ளது : சிவசக்தி ஆனந்தன்
மக்கள் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்ற போராட்டங்களின் காரணமாகவே படையினர் வசமுள்ள மக்களின் காணிகள் தொடர்ச்சியாக விடுவிக்கப்பட்டு வருகின்றன.
அதன் ஓர் அங்கமாகவே மயிலிட்டியில் மக்களின் காணி விடுவிக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
மன்னார் நகர சபையின் புதிய அலுவலகக்கட்டிடம் இன்று காலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.
எங்களுடைய ஒட்டு மொத்த அழுத்தங்களையும் ஒற்றுமையாக மத்திய அரசிற்கு கொடுக்க வேண்டிய நேரத்தில் எதிர் மறையாக எங்களுடைய மாகாண சபை உறுப்பினர்கள் சிலரும், அமைச்சர்கள், எங்களுடைய முதலமைச்சரை தூக்கி வீச வேண்டும் என்பதற்காக மத்திய அரசாங்கத்தில் உள்ள உறுப்பினர்களுடன் இணைந்து, வடமாகாண மக்களினால் தெரிவு செய்யப்பட்ட முதலமைச்சரை தூக்கி எறிகின்ற நிலைக்கு வரும் அளவிற்கு எங்களுடைய தலைமை இருக்கின்றது.
மக்களினால் தெரிவு செய்யப்பட்ட வடமாகாண சபையை மத்திய அரசின் காலில் வீழ்ந்து கலைக்கின்ற நிலையும் ஏற்பட்டது என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றம் சாட்டியுள்ளார்.
முதலமைச்சரை தூக்கி எறிகின்ற நிலைக்கு எமது தலைமை உள்ளது : சிவசக்தி ஆனந்தன்
Reviewed by NEWMANNAR
on
July 05, 2017
Rating:

No comments:
Post a Comment