ஐ.நா அமைதிக்கான விருது: தமிழக சிறுவன் பரிந்துரை...
பழங்குடியின சிறுவர்களின் முன்னேற்றத்துக்குப் பாடுபடும் தமிழகத்தைச் சேர்ந்த சக்தி என்ற சிறுவன் ஐ.நா-வின் சர்வதேசக் குழந்தைகள் அமைதிக்கான விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளான்.
தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுவன் சக்தி. இச்சிறுவன் அங்குள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறான்.
முதலில் பாசிமணி விற்றுக் கொண்டிருந்த சிறுவன், தொண்டு நிறுவனத்தின் உதவியின் மூலம் தற்போது படித்து வருகிறான்.
இந்நிலையில் சக்தி பள்ளியின் விடுமுறை நாட்களின் போது ஊசிமணி விற்கச் செல்லும் போது, தங்கள் சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளை பார்த்து பேசுவது வழக்கம்.
அப்படி பேசும் போது, சக்தி அவர்களிடம், நீங்கள் பள்ளியில் படித்தால் பெரிய ஆளாக வந்துவிடலாம், நான் உங்களை பள்ளியில் சேர்த்து படிக்கவைக்கிறேன் என்று கூறியுள்ளார்.
சக்தியின் பேச்சைக் கேட்ட சக குழந்தைகளும், அவர்கள் பெற்றோர்களிடம் சென்று இது குறித்து கூறியுள்ளனர்.
இது போன்று சக்தி மற்றும் அவரது நண்பர்கள் மூலம் 25 சிறுவர்கள் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து அவரின் சமூகத்தைச் சேர்ந்த பலரும் தற்போது பள்ளி வரத் துவங்கியுள்ளனர்.
இப்படி பழங்குடியின சிறுவர்களின் முன்னேற்றத்துக்குப் பாடுபடும் சிறுவன் சக்தியை ஊக்குவிக்கும் விதமாக ஹாண்ட் இன் ஹாண்ட் நிறுவனம், ஐ.நா-வின் சர்வதேசக் குழந்தைகள் அமைதிக்கான விருதுக்கு சக்தியை பரிந்துரை செய்துள்ளது.
ஐ.நா அமைதிக்கான விருது: தமிழக சிறுவன் பரிந்துரை...
Reviewed by Author
on
July 29, 2017
Rating:
Reviewed by Author
on
July 29, 2017
Rating:


No comments:
Post a Comment