வெள்ளை மாளிகையின் தலைமை நிர்வாகியாக இந்தியர் நியமனம்....
இந்திய வம்சாவளியை சேர்ந்த நியோமி ராவ் என்ற பெண் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையின் நிர்வாக தலைமை பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் வசிக்கும் நியோமி ராவ் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். அங்குள்ள விர்ஜீனியா மாகாணத்தில் அமைந்திருக்கும் ஸ்காலியா சட்ட கல்லூரியில் நியோமி பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் நியோமியை அமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் வாஷிங்டனில் இருக்கும் வெள்ளை மாளிகையின் தலைமை நிர்வாகியாக நியமித்துள்ளார்.
வெள்ளை மாளிகையின் நிர்வாகம் மற்றும் பட்ஜெட் தொடர்பான முடிவுகளை எடுக்கும் அதிகாரமும் நியோமி ராவிடம் இருப்பதால் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பதவியாக கருதப்படுகிறது.
நியோமி ராவ் இதற்கு முன்பாக முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் அரசாங்கத்தில் இணை ஆலோசகராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வெள்ளை மாளிகையின் தலைமை நிர்வாகியாக இந்தியர் நியமனம்....
Reviewed by Author
on
July 12, 2017
Rating:

No comments:
Post a Comment