அண்மைய செய்திகள்

recent
-

கனடிய பிரதமர் கலந்து கொள்ளும் 3ஆவது கனடிய தமிழர் தெருவிழா 2017


கனடியத் தமிழர் பேரவையினரால் வருடாந்தம் ஒழுங்கு செய்யப்படும் 'தமிழர் தெருவிழா' 3ஆவது முறையாக இவ்வாண்டும் மிகவும் கோலாகலமாக நடைபெறவுள்ளது.

குறித்த விழா ஓகஸ்ட் 26, 27 ஆம் திகதிகளில் Markham Road இல் McNicoll Avenueவிற்கும் Passmore Avenueவிற்கும் இடையேயுள்ள வீதிப்பகுதி முழுமையாக மூடப்பட்டு, தமிழர் பெருமையைப் பறைசாற்றும் வகையில் நடைபெறவுள்ளது.

இவ்வாண்டு தெருவிழாவில் தமிழர் பெருமை சொல்லும் கலாச்சார நிகழ்வுகள் மட்டுமன்றி பொழுதுபோக்கு நிகழ்வுகளுடன், ஏராளமான உணவு வகைகளும், தாயத்திலிருந்து தருவிக்கப்பட்ட பழவகைகளும் விழாவில் இடம்பெறவுள்ளன.

இந்த நிலையில், குறித்த இரண்டு தினங்களிலும் 200,000 பார்வையாளர்கள் கலந்து கொள்வார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளதுடன், கனடாவின் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவும் வருகை தரவுள்ளார்.

புலம்பெயர் தமிழ் மக்களின் நிகழ்வு ஒன்றிற்கு அந்த நாட்டின் பிரதமராகப் பதவியிலிருக்கும் ஒருவர் வருகை தருவது இதுவே முதன் முறையாகும்.


மேலும், கனடாவின் மத்திய, மாநில, உள்ளூராட்சி அரசு நிலைத் தலைவர்களும், வேறுபல உயர்நிலை அரசியல்வாதிகளும் தெருவிழாவினை பார்வையிட வருகை தரவுள்ளார்கள்.

இதேவேளை, தாயகத்தின் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலிருந்து சிறப்பு விருந்தினர்களாக பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும் கிழக்கு மாகாண அமைச்சர் துரைராஜசிங்கம் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர்.

தாயகத்துடன் புலம்பெயர் சமூகம் கொண்டிருக்க வேண்டிய வர்த்தக இணைப்பினை முன்னெடுக்கும் அங்காடிகளுக்கும், நடவடிக்கைகளுக்கும் இவ்வாண்டிற்கான தெருவிழாவில் முன்னுரிமை தரப்பட்டுள்ளன.


தமிழ்க் கனடியர்களின் இருப்பினை கனடிய மைய நீரோட்டத்திற்கு எடுத்துச் செல்லும் முயற்சியே தமிழர் தெருவிழா ஆகும்.

எதிர்கால தமிழ் கனடியச் சந்ததியினருக்கு ஒரு வலுவான அடித்தளத்தினை அமைத்துக் கையளிக்க வேண்டியது நம் கடமையாகும். இந்த முயற்சியின் பெறுபேறுகளில் ஒன்றே தமிழர் தெருவிழா.

சமூகத்தின் ஒற்றுமையும், ஆற்றலையும் சக கனேடியர்களுக்கு எடுத்துக்காட்டவும், தமிழ்ச் சமூகம் கனடாவின் பல்கலாச்சாரத்தின் குறிப்பிடத்தக்க அங்கமாக பிரகாசத்துடன் தென்பட வேண்டும் என்ற தொலை நோக்குப் பார்வையுடனும் இந்த கொண்டாட்டம் நடத்தப்படுகிறது.

இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் தமிழர் தெருவிழா 2017இனை ரொறன்ரோ மேயர் ஜோன் ரோறி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

கனடிய பிரதமர் கலந்து கொள்ளும் 3ஆவது கனடிய தமிழர் தெருவிழா 2017 Reviewed by Author on August 27, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.