அண்மைய செய்திகள்

recent
-

விமானத்தில் சிக்கித் தவித்த 336 பயணிகள்: காப்பாற்றும் படி பொலிசாருக்கு தகவல்.


கனடாவில் விமானத்தில் சிக்கித்த தவித்த 336 பயணிகளை பொலிசார் பத்திரமாக மீட்டுள்ளனர்.

கனடாவின் Ottawa விமானநிலையத்தில் கடந்த திங்கட்கிழமை Transat விமானம் 336 பயணிகளுடன் பிரசல்ஸ் நகருக்கு செல்ல தயாராக இருந்துள்ளது.

விமானம் புறப்பட தயாராக இருந்த போது சரியான சிக்னல் கிடைக்க வில்லை.
இதனால் விமானம் சுமார் 5 மணி நேரம் ஓடுதளத்திலே நின்றுள்ளது. இதனால் விமானத்தின் உள்ளே இருந்த பயணிகள் சற்று தயக்கமடைந்துள்ளனர்.

அதைத் தொடர்ந்து விமானத்தின் ஏசியும் இயங்காததால், ஆத்திரம் அடைந்த பயணிகள் உடனடியாக பொலிசாருக்கு தொடர்பு கொண்டு, நாங்கள் விமானத்தில் சிக்கி விட்டதாகவும், உடனடியாக தங்களை வந்து காப்பாற்றும் படி கூறியுள்ளனர்.


அதைத் தொடர்ந்து பொலிசார் பயணிகளை பத்திரமாக மீட்டுள்ளனர்.

மேலும் இது குறித்து விமான நிலையம் சார்பில் தெரிவிக்கையில், மோசமான வானிலை காரணமாக விமானம் நிறுத்தப்பட்டிருந்ததாகவும், நிலையை உணர்ந்து அதிகாரிகள் உடனே அனுப்பிவைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பான வீடியோக்களை விமானத்தில் இருந்த பயணிகள் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர்.

விமானத்தில் சிக்கித் தவித்த 336 பயணிகள்: காப்பாற்றும் படி பொலிசாருக்கு தகவல். Reviewed by Author on August 04, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.