இங்கிலாந்து அணியின் 79 ஆண்டு கால தாகத்தை தணித்த வீரர்....
தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான போட்டியின் போது ஹாட்ரிக் விக்கெட் எடுத்த மொயின் அலி இங்கிலாந்து அணியின் 79 ஆண்டுகால தாகத்தை தணித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்கா அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகள் மோதிய மூன்றாவது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணி 239 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரில் 2-1 என்ற முன்னிலையில் உள்ளது.
இப்போட்டியின் இங்கிலாந்து வீரர் மொயின் அலி ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அசத்தினார். அவர் ஹாட்ரிக் விக்கெட் எடுத்ததன் மூலம் சர்வதேச டெஸ்ட் போட்டியில் 79 ஆண்டுகளுக்கு பின் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இதற்கு முன்னர் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரும் சுழற்பந்து வீச்சாளருமான டாம் கோடர்ட் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியின் போது ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து அணியின் 79 ஆண்டு கால தாகத்தை தணித்த வீரர்....
Reviewed by Author
on
August 03, 2017
Rating:

No comments:
Post a Comment