கிழக்கு பல்கலைக்கழகத்தினை முற்றுகையிட்டிருக்கும் சிங்கள மாணவர்களை வெளியேறுமாறு நீதிமன்றம் உத்தரவு...
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வந்தாறுமூலை வளாக நிர்வாகக் கட்டடத்தை முற்றுகையிட்டுள்ள மாணவர்களை உடனடியாக வெளியேறுமாறு, ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் வி.தியாகேஸ்வரன் இன்றைய தினம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கிழக்குப் பல்கலைக்கழக சிங்கள மாணவர்கள், ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, 63ஆவது நாளாக சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், செவ்வாய்கிழமை(08) பிற்பகல், நிர்வாகக் கட்டடத்தை முற்றுகையிட்டிருந்தனர்.
இதன்காரணமாக, பல்கலைக்கழகத்தின் நிர்வாக நடவடிக்கைள் முற்றாகத் தடைப்பட்டதுடன், நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான சூழல் இல்லை என்று கோரி, கல்விசாரா ஊழியர்களும் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதனை அடுத்து, நிர்வாகக் கட்டத்தை முற்றுகையிட்டு, நிர்வாக நடவடிக்கைளுக்கு இடையூறு விளைவிக்கின்றனர் என, இதற்குத் தலைமை தாங்கும் 19 மாணவர்களுக்கு எதிராக ஏறாவூர் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன் அடிப்படையில், குறித்த வழக்கை விசாரணை செய்த பதில் நீதிவான் வி.தியாகேஸ்வரன், சிங்கள மாணவர்கள் நிர்வாகக் கட்டடத்திலிருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கிழக்கு பல்கலைக்கழகத்தினை முற்றுகையிட்டிருக்கும் சிங்கள மாணவர்களை வெளியேறுமாறு நீதிமன்றம் உத்தரவு...
Reviewed by Author
on
August 12, 2017
Rating:

No comments:
Post a Comment