தமிழ் மொழிக்கு கூகிள் கொடுத்த புதிய அங்கீகாரம்....
தமிழ் மற்றும் சிங்கள மொழிகளை தமது பேச்சு அங்கீகார விருப்பத்திற்குள் சேர்த்துள்ளதாக கூகிள் நிறுவனம் அறிவித்துள்ளது
விரல்களால் தட்டச்சு செய்வதைக்காட்டிலும் குரலில் கட்டளையிட்டு எழுத்துக்களை அச்சிடச்செய்வது 3 மடங்கு வேகமாக நிகழக்கூடியதாக இருக்கும்.
இதனை மனதில் கொண்டே தமது நிறுவனம் குரல் தட்டச்சு முறையை அறிமுகப்படுத்தியுள்ளதாக கூகிள் நிறுவனம் கூறியுள்ளது.
இந்தமுறை தற்போது 30 இற்கும் மேற்பட்ட மொழிகளில் பில்லியனுக்கும் அதிகமாக மக்களுக்கு நன்மை தரும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
கூகிளின் பேச்சு அங்கீகாரம் என்ரொய்ட் குரல் தேடலின் 119 மொழிகளுடன் இணைந்து செல்கிறது.
இந்தநிலையில் அமெரிக்க ஆங்கிலத்தில் எமோஜியுடன் குரல்களை வெளிப்படுத்த முடியும் என்று கூகிள் நிறுவனம் அறிவித்துள்ளது.
தமிழ் மொழிக்கு கூகிள் கொடுத்த புதிய அங்கீகாரம்....
Reviewed by Author
on
August 15, 2017
Rating:
Reviewed by Author
on
August 15, 2017
Rating:


No comments:
Post a Comment