ஜெயலலிதா காலில் விழ சொன்னார்கள்: கமல் பேட்டி...
நடிகர் கமல்ஹாசன் தமிழக அரசுக்கு எதிராக தொடர்ந்து கருத்து கூறி வரும் நிலையில், அவர் அரசியலில் விரைவில் குதிப்பார் என சமூகவலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
ஆனால், தனக்கு கொடுக்கப்படும் அழுத்தத்தை வைத்தே அரசியல் முடிவை எடுப்பேன் என கமல் கூறியுள்ள நிலையில், தன்னுடைய விஸ்வரூபம் படத்திற்கு நேர்ந்த கதி குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
இவரின் விஸ்வரூபம் படத்தை ஆளுங்கட்சியில் அந்த சமயத்தில் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா தான் எதிர்த்தார் என்று பலரும் பேசினார்கள்.
இதை கமல் சமீபத்திய பேட்டியில் வெளிப்படையாகவே பேசினார், பல சினிமா நண்பர்கள் அன்றைய தினம் என் வீட்டிற்கு வந்தார்கள்.
அனைவருமே என்னை அந்த அம்மா காலில் போய் விழ சொன்னார்கள், அதற்கு நான் ‘கண்டிப்பாக என்னை விட மூத்தவர்கள் காலில் விழுவதில் எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.
ஆனால், ஒரு தவறும் செய்யாமல் எவர் காலிலும் என்னால் விழ முடியாது, அதனால், எத்தனை கோடி நஷ்டமானாலும் பரவாயில்லை’ என கமல் கூறியுள்ளார்.
ஜெயலலிதா காலில் விழ சொன்னார்கள்: கமல் பேட்டி...
Reviewed by Author
on
August 01, 2017
Rating:

No comments:
Post a Comment