தமிழக அரசியல் திடீர் திருப்பம்! சர்ச்சைக்குரிய அணிகள் ஒன்றாக இணைய இணக்கம்
தமிழக அரசியலில் தீர்மானமிக்க மாற்றம் ஒன்று நிகழவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
பிளவுபட்டிருந்த அதிமுக கட்சியின் இரு அணியினர் ஒன்றாக இணைவதற்கான இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தனித்தனி அணிகளாக பிரிந்திருந்த ஓ.பி.எஸ் மற்றும் எடப்பாடி அணி இணைவதற்கு இறுதிக்கட்டம் எட்டியுள்ளதாக சென்னை அரசியல் வட்டாரத் தகவல் தெரிவிக்கிறது.
இதன் படி ஓ.பி.எஸ்., தனது ஆதரவாளர்களுடனும், முதல்வர் எடப்பாடி மூத்த அமைச்சர்களுடனும் அவசர ஆலோசனை நடத்தினர்.
இதனையடுத்து ஓ.பி.எஸ்சுக்கு கட்சி மற்றும் ஆட்சியில் முக்கியத்துவம் அளிப்பது என்றும், இவரது ஆதரவாளர்களுக்கு அமைச்சர் பதவி அளிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி இறுதி அறிவிப்பை மெரினாவில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சமாதியில் வைத்து வெளியிடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தீர்மானமிக்க அறிவிப்பு இன்று நள்ளிரவுக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராமின் மறைவுக்குப் பின்னர் அதிமுக கட்சி மூன்று பிரிவுகளாக பிளவுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசியல் திடீர் திருப்பம்! சர்ச்சைக்குரிய அணிகள் ஒன்றாக இணைய இணக்கம்
Reviewed by Author
on
August 19, 2017
Rating:

No comments:
Post a Comment