பிரித்தானிய மகாராணியிடம் சிறப்பு விருதை பெற்ற இலங்கை இளைஞர்....
முற்றாக குணப்படுத்த கூடிய சிகிச்சை முறை இதுவரை கண்டுபிடிக்கப்படாத எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாகியவர்களுக்கான மருந்து ஒன்றை கண்டுபிடித்த இலங்கையை சேர்நத ரக்கித மாலேவன என்ற இளைஞனுக்கு பிரித்தானிய மகாராணியார் விசேட விருதை வழங்கியுள்ளார்.
ரக்கித மாலேவன கொழும்பு மருத்துவ ஆய்வு நிறுவனம் மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் வெளிவாரி மருத்துவ ஆய்வாளராகவும் கடமையாற்றி வருகிறார்.
ரக்கித ஆனந்த கல்லூரியில் கல்வி கற்று வந்த போது உலகம் வியந்து போன எச்.ஐ.வி புதிய மருந்தை கண்டுபிடித்தார்.
அதேவேளை இந்த விருது வழங்கும் விழாவில் ஆண் - பெண் சம உரிமைக்காக போராடும் இலங்கையை சேர்ந்த மற்றுமொரு இளைஞனான செனேல் வன்னியாராச்சியும் மகாராணியாரின் விருதை பெற்றுள்ளார்.

பிரித்தானிய மகாராணியிடம் சிறப்பு விருதை பெற்ற இலங்கை இளைஞர்....
Reviewed by Author
on
August 05, 2017
Rating:

No comments:
Post a Comment