வவுனியாவில் புகையிரத்துடன் மோதிய அரசபேரூந்து விபத்து.....
வவுனியாவிலிருந்து பயணிகளுடன் பயணித்த வவுனியா-மெனிக்பாமிற்கான அரச பேருந்து ஒன்று புகையிரத கடவையை கடக்க முயன்ற வேளையில் மதவாச்சியிலிருந்து மன்னார் நோக்கி பயணித்து கொண்டிருந்த புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளாதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வவுனியா செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியில் இன்று 04.08-2017மாலை 4 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
மேலும் இவ்விபத்தில் பேருந்தின் சாரதி உட்பட 6 பேர் காயமடைந்துள்ளதாகவும் பேருந்தின் சாரதி ரஹீம் (வயது 30) படுகாயமடைந்துள்ளதாகவும் அறியப்படுகிறது.
இப் புகையிரத கடவையானது பாதுகாப்பற்ற புகையிரத கடவை என்பது குறிப்பிடத்தக்கது.
காயத்திற்குள்ளானவர்கள் செட்டிகுளம் ஆதார வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்கள்.
இதேவேளை, இந்தவிபத்தை அடுத்து புகையிரதத்தை செல்லவிடாமல் பிரதேசவாசிகள் தடைகளை ஏற்படுத்தினர் இதன்போது அங்கு விரைந்த பொலிசார் மக்களுடன் கதைத்து புகையிரதபயணத்தினை தொடரச்செய்தனர்.
வவுனியாவில் புகையிரத்துடன் மோதிய அரசபேரூந்து விபத்து.....
Reviewed by Author
on
August 04, 2017
Rating:

No comments:
Post a Comment