நியூசிலாந்து பாராளுமன்றத்துக்கு 2 பெண்கள் உள்பட 3 இந்தியர்கள் தேர்வு
நியூசிலாந்து பாராளுமன்றத்துக்கு டாக்டர் பரம்ஜீத் பார்மர், பிரியங்கா ராதாகிருஷ்ணன் ஆகிய 2 பெண்கள் உள்பட 3 இந்தியர்கள் வெற்றி பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
119 இடங்களை கொண்டுள்ள நியூசிலாந்து நாட்டின் பாராளுமன்றத்துக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. உடனடியாக ஓட்டு எண்ணிக்கையும் முடிந்து விட்டது. இந்த தேர்தலில் எந்தக்கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆட்சி அமைப்பதற்கு 61 இடங்கள் தேவை என்ற நிலையில், 3 முறை அரசு அமைத்த தேசியக்கட்சி 58 இடங்களை பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவாகி உள்ளது.
இந்த தேர்தலில், டாக்டர் பரம்ஜீத் பார்மர், பிரியங்கா ராதாகிருஷ்ணன் ஆகிய 2 பெண்கள் உள்பட 3 இந்தியர்கள் வெற்றி பெற்று, நியூசிலாந்து பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
நியூசிலாந்து பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள மற்றொரு இந்தியர் கன்வல்ஜீத் சிங் பாக்சி ஆவார். இவர் தொடர்ந்து 4-வது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.
டாக்டர் பரம்ஜீத் பார்மர் 2-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும் தேசியக்கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.
பிரியங்கா ராதாகிருஷ்ணன் (வயது 38), தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார். இந்தக் கட்சி 45 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதன் கூட்டணிக் கட்சியான பசுமைக்கட்சி 7 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. கன்வல்ஜீத் சிங் பாக்சி, டெல்லியில் பிறந்தவர். பிரியங்கா ராதாகிருஷ்ணன், கேரள மாநிலம், பரவூரை சேர்ந்தவர்.
நியூசிலாந்து பாராளுமன்றத்துக்கு 2 பெண்கள் உள்பட 3 இந்தியர்கள் தேர்வு
Reviewed by Author
on
September 25, 2017
Rating:
Reviewed by Author
on
September 25, 2017
Rating:


No comments:
Post a Comment