முதல் முறையாக பிகாசோவின் 3 ஓவியங்கள் இணைகின்றன
ஓவியர் பிகாசோவால் வரையப்பட்ட 3 ஓவியங்கள் முதல் முறையாக இணைக்கப்பட்டு பாரிசில் உள்ள பிகாசோ அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட உள்ளது.
ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற ஓவியரான பாப்லோ பிகாசோ, 1932-ல் வரைந்த ஓவியங்களான, நூட், கிரீன் லீவ்ஸ் மற்றும் பஸ்ட், நூட் இன் ப்ளக் ஆர்ம்சார் மற்றும் த மிரர் ஆகிய மூன்று ஓவியங்கள் மிகவும் புகழ் பெற்றதாகும். இவை மூன்றும் அவரது காதலியை பிரதிபலிக்கும் வகையில் வரையப்பட்டது ஆகும்.
இந்த மூன்று ஓவியங்களும் இதுவரை ஒரே நேரத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டதில்லை. முதல் முறையாக பாரிசில் உள்ள பிகாசோ அருங்காட்சியகத்தில் காட்சிக்காக வைக்கப்பட உள்ளது. இதுபற்றிய அறிவிப்பை லண்டனில் உள்ள புகழ்பெற்ற நவீன அருங்காட்சியகமான டேட் மாடர்ன் அறிவித்துள்ளது.
அதன்படி, பிக்காசோவின் இந்த மூன்று ஓவியங்களும் வரும் அக்டோபர் 10-ம் தேதி முதல் பிப்ரவரி 11-ம் தேதி வரை பாரிசில் உள்ள பிகாசோ அருங்காட்சியகத்தில் சேர்த்து வைக்கப்படும். அடுத்த ஆண்டு மார்ச் 8 முதல் செப்டம்பர் 9-ம் தேதி வரை லண்டன் டேட் மாடர்ன் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் முறையாக பிகாசோவின் 3 ஓவியங்கள் இணைகின்றன
Reviewed by Author
on
September 23, 2017
Rating:
Reviewed by Author
on
September 23, 2017
Rating:


No comments:
Post a Comment