இறைச்சி சமைக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை....
இறைச்சி சமைக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை
இறைச்சி சமைக்கும் போது என்னென்ன விஷயங்களை கவனிக்க வேண்டும். எப்பிடி சமைக்க வேண்டும்? எப்பிடி சாப்பிட வேண்டும் போன்ற விரிவான தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.
இறைச்சி உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது குழம்பு வடிவத்தில் எடுப்பது தான் நல்லது. அப்படி சாப்பிட்டால் அவற்றின் ஆற்றலை உடனடியாக நம் உடலில் சேரும்.
கோழியை தோலுடன் சமைப்பதே சிறந்தது. நாட்டுக் கோழிக்கு, தோலுக்கும் சதைக்கும் இடையிலான கொழுப்புப் படிவம் மிக மெல்லியதாகவே இருக்கும். இது சமைக்கும்போது தனியாகத் திரளாமல் குழம்புடன் கலந்துவிடும். செரிமானத்திலும் தொல்லை தராது. செரிமானத்தில் தொல்லை தராத கொழுப்பு, உடலுக்கு நேரடியாக ஊக்கம் தருவதாகவே இருக்கும்.
இறைச்சி என்றாலே நன்றாக கழுவி குக்கரில் ஐந்தாறு விசில் வருகிற வரை நன்றாக வேக வைத்துவிட்டு மற்ற விஷயத்தை செய்வோம். இது தவறானது. அதிக அழுத்தத்தில் வேகும் உணவுப் பொருள் தனது சத்துக்களை இழக்க நேரிடும். அவற்றை உண்ணும் நமக்கும் செரிமானம் நடக்க தாமதமாகும். இறைச்சியை சமைக்க மண் பாத்திரத்தை தேர்வு செய்வது நல்லது. கூடுதலாக அதிக நேரம் எடுத்துக்கொண்டாலும் பரவாயில்லை என்று மண் பாண்டத்தையே தேர்ந்தெடுங்கள். மண் பாண்டத்தில் சமைக்கிறபோது, அடுப்பின் வெப்பம் அடிப்பகுதியுடன் தங்கி விடுவதில்லை. பாத்திரம் முழுவதும் சீராகப் பரவி உணவுப் பொருளை ஒரே சீராக வேக வைக்கிறது.
எந்த இறைச்சியாக இருந்தாலும் அதன் ரத்தத்தை நீக்கிச் சமைப்பதே உடலுக்கு நன்மை தரும். இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது அதில் முக்கியமானது, இறந்த உடன் ரத்ததில் உள்ள செல்கள் உடனடியாக அழுகத் தொடங்கிடும். நீங்கள் வாங்கும் கறி ஃப்ரஷ்ஷானது தானா என்பதையும் அதிலிருக்கும் ரத்தத்தை வைத்தே கண்டுபிடிக்கலாம். நல்ல உடல்நலத்துடன் இருக்கும் ஆடு வெட்டப்படும் போது அதிலிருந்து ரத்தம் முழுவதும் வடிந்துவிடும். இறைச்சியில் ரத்தம் நிற்காது.
கறி வாங்கச் செல்லும் போது அதிகமாக இருக்கும் என்பதால் தொடைக்கறி என்று கேட்டு வாங்குவார்கள். அதிக அசைவுகள் உள்ள தசைகள் கடினமானதாக இருக்கும். நெஞ்சுப்பகுதி மற்றும் முதுகுப்பகுதி தசைகள் மென்மையானதாக இருக்கும் என்பதால் அவற்றை வாங்கலாம்.
இறைச்சி சமைக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை....
Reviewed by Author
on
September 09, 2017
Rating:
Reviewed by Author
on
September 09, 2017
Rating:


No comments:
Post a Comment