சத்தான டிபன் சிறு தானிய கொழுக்கட்டை
சிறுதானியங்களை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது உடலுக்கும் மிகவும் நல்லது. இன்று சிறுதானியத்தை வைத்து கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
சத்தான டிபன் சிறு தானிய கொழுக்கட்டை
தேவையான பொருட்கள் :
சிறு தானிய அரிசிக் குருணை - ஒரு கப்,
சீரகம் - ஒரு டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு,
கடுகு, கறிவேப்பிலை கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு - தாளிக்க,
காய்ந்த மிளகாய் - 4.
செய்முறை :
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், கறிவேப்பிலை கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
இதனுடன் உப்பு, மூன்று கப் தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க விடவும்.
பிறகு சிறுதானி அரிசிக் குருணை சேர்த்து கிளறி வேக விட்டு இறக்கவும்.
ஆறியதும் சிறிய உருண்டைகளாக பிடித்து ஆவியில் 12 நிமிடம் வேக வைத்து எடுத்து பரிமாறவும்.
சத்தான டிபன் சிறு தானிய கொழுக்கட்டை ரெடி.

சத்தான டிபன் சிறு தானிய கொழுக்கட்டை
Reviewed by Author
on
September 02, 2017
Rating:
Reviewed by Author
on
September 02, 2017
Rating:

No comments:
Post a Comment