காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க விடமாட்டோம் - கர்நாடக மந்திரி எம்.பி.பட்டீல்
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது கர்நாடகத்தின் நலனுக்கு எதிரானது என்றும், மத்திய அரசு அந்த வாரியத்தை அமைக்க முயன்றால் கர்நாடக அரசு எதிர்க்கும் என்று அம்மாநில நீர்வளத்துறை மந்திரி எம்.பி.பட்டீல் கூறியுள்ளார்.

மத்திய அரசிதழில் வெளியிட்ட பின்னரும் காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் தாமதம் ஏன் என மத்திய அரசை சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் கேள்வி எழுப்பியிருந்தது.
இந்நிலையில், இது குறித்து பேசிய கர்நாடக மாநில நீர்வளத்துறை மந்திரி எம்.பி.பட்டீல்,“ காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது கர்நாடகத்தின் நலனுக்கு எதிரானது என்றும், மத்திய அரசு அந்த வாரியத்தை அமைக்க முயன்றால் கர்நாடக அரசு கடுமையாக எதிர்க்கும்” என்று கூறினார்.
மேலும், “காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும் அதிகாரம் மத்திய அரசுக்குத்தான் உள்ளது என்றும், அதுபோன்ற வாரியத்தை அமைக்கும் அதிகாரம் சுப்ரீம் கோர்ட்டுக்கு இல்லை என்றும், அப்படி அமைப்பதற்கான உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்தால் அது அதிகார மீறலாக இருக்கும்’’ என்றும் தெரிவித்தார்.
இதற்கிடையே, அந்த மாநில முதல்-மந்திரி சித்தராமையா நேற்று மைசூரு நகரில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ள யோசனையின்படி காவிரி கண்காணிப்பு குழு அமைக்கப்படுவதை கர்நாடக அரசு எதிர்க்கும் என்று கூறியிருந்தார்.
காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க விடமாட்டோம் - கர்நாடக மந்திரி எம்.பி.பட்டீல்
Reviewed by Author
on
September 21, 2017
Rating:
Reviewed by Author
on
September 21, 2017
Rating:

No comments:
Post a Comment