பொருத்து வீட்டை விரும்பாதவா்கள் கல்வீட்டிற்கு விண்ணப்பிக்கலாம்
யாழ் மாவட்டத்தில் பொருத்து வீட்டுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு கல்வீடு தேவை என கோரும் இடத்து கல்வீடு வழங்கப்படும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் என். வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்படி தெரிவித்தார்.
யாழ் மாவட்டத்தில் இன்னும் 25 ஆயிரம் வீடுகளுக்கான தேவை உள்ளது. இந்த வருடம் 1100 வீடுகள் கட்டப்படுகிறது.
அடுத்த வருடத்துக்கு மீள்குடியேற்ற அமைச்சாரக மேலும் 50 ஆயிரம் வீடுகள் வழங்கப்படவுள்ளது. அந்தவகையில், அண்மையில் பலர் பொருத்து வீட்டுக்கு விண்ணப்பித்திருந்தனர்.
இவர்களில் சிலர் கல் வீடு கிடைக்காது என்ற நிலைப்பாட்டிலும் பொருத்து வீட்டுக்கு விண்ணப்பித்திருக்கலாம். எனவே பொருத்து வீட்டுக்கு விண்ணப்பித்தவர்கள் கல்வீடு தேவை என கருதினால் மாற்றி விண்ணப்பிக்க முடியும். மக்களின் விருப்பம் என்னவோ அதன்படி கொடுப்போம் என தெரிவித்தார்.
பொருத்து வீட்டை விரும்பாதவா்கள் கல்வீட்டிற்கு விண்ணப்பிக்கலாம்
Reviewed by Author
on
September 17, 2017
Rating:

No comments:
Post a Comment