அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில்.....ஐரோப்பிய ஒன்றிய உதவியின் கீழ் 05ஆண்டு காலமாக ஒன்றிணைந்து செயலாற்றிய செயற்பாடுகளின் கண்காட்சி

திட்டத்திற்கான ஐரோப்பிய ஒன்றிய  உதவியின் கீழ் 05ஆண்டு காலமாக ஒன்றிணைந்து செயலாற்றிய செயற்பாடுகளின் கண்காட்சி இன்று 10-10-2017 மன்னார் மாவட்டத்தில் இன்று காலை 10 மணியளவில் ஆஹாஸ் கொட்டலில்  நடைபெற்றது

 விருந்தினர்களாக
  • மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்  M.Y.S.தேசப்பிரிய
  • மன்னார் பிரதேச செயலாளர் M.பரமதாசன்
  • பிரதேச செயலாளர்கள் திட்டப்பணிப்பாளர்கள் முகாமையாளர்கள்
அரச அரசசார்பற்ற தினைக்கள அதிகாரிகள் அமைப்புக்களின் உறுப்பினர்கள் மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்திற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஹர்ஷினி ஹலங்கொட மற்றும் பிரதிநிதிகள்
என பலரும் கலந்துகொண்டனர்

இலங்கையின் வறுமைச்சமூகங்களின் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தல் மற்றும் உள்ளூர் பொருளாதாரங்களுக்கு அனுகூலங்களைப்பெற்றுக்கொடுக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டிருந்த செயற்பாடுகள் இந்தகண்காட்சியில் உள்ளடக்கபட்டிருந்தன
ஐந்து ஐக்கிய நாடுகள் அமைப்புக்களான
  • UNDP
  • UNICEF
  • UNOPS
  • FAO
  • ILO
மற்றும் உலக வங்கியின் அங்கத்துவ அமைப்பான IFC இணைந்து மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்துக்கான ஐரோப்பிய ஒன்றிய உதவி நிகழ்ச்சி தில்லத்தினை ந்டைமுறைப்படுத்தியிருந்தன...
உதவிகளில் சில
  • 9200 சிறுவர்களுக்கு உதவி
  • 10000 குடும்பங்களுக்கு  மேல்  விவசாய  உற்பத்திக்கு  உதவி
  • 31விவசாயக்குளங்கள் புனரமைப்பு
  • 1300க்கும் அதிகமான இளைஞர்களுக்கு திறன்மேம்படுத்தல்
  • 21 தொழில்பயிற்ச்சி நிலையங்களுக்கு உதவி
இவ்வாறான பல திட்டங்களின் மூலம் தனிந்பர் குழு சமூகம் மாவட்ட சார்ந்த மக்களின் திறன் பொருளாதாரமுன்னேற்றம் வாழ்க்கைத்தரம் என்பனவற்றில் செல்வாக்கு செலுத்தியதுடன் பல அமைப்புக்களுடன் இணைந்து கூட்டாக செயற்பட்டு மாவட்ட அபிவிருத்தி திட்டங்கள் வடிவமைத்துள்ளன 
EU-SDDPஊடாக UNDP வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய இடையீடுகள் மன்னார் மாவட்டத்தில் நேரடியாக  19000 தனிநபர்களை சென்றடைந்ததுடன் வவுனியா மாவட்டத்தில் 17000க்கும் அதிகமான நபர்களை சென்றடைந்துள்ளது.


விருந்தினர் உரையின் சாரம்சம்
இலங்கையைப்பொறுத்தமட்டில்  30 ஆண்டுகால யுத்தம் இயற்கையனர்த்தங்கள்  மற்றும் காலமாற்றங்கள் பொருளாதார சிக்கல்கள் போன்றவற்றில் இருந்து மக்களை குறிப்பாக வடகிழக்கு தென்பகுதிகள் பயனடைந்துள்ளன இவ்வாறான ந்ல்லசெயற்தில்லங்களை செய்யும்  பாராட்டுகின்றோம் அத்தோடு இன்னும் இவ்வமைப்பினரின் சேவைகள் எமக்கு தேவையாகவுள்ளது.
-வை-கஜேந்திரன்-



















மன்னாரில்.....ஐரோப்பிய ஒன்றிய உதவியின் கீழ் 05ஆண்டு காலமாக ஒன்றிணைந்து செயலாற்றிய செயற்பாடுகளின் கண்காட்சி Reviewed by Author on October 10, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.