100க்கு 100 மதிப்பெண் எடுத்தால் விமானத்தில் பறக்கலாம் -
சென்னையில் ஆசிரியை ஒருவர் சிறந்த மதிப்பெண்கள் எடுத்த அரசு பள்ளி மாணவிக்கு விமானப்பயணம் வாய்ப்பினை வழங்கி சிறப்பித்துள்ளார்.சென்னை, அம்பத்தூரில் உள்ள காமராஜர் அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார் செல்வகுமாரி.
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு சமூக அறிவியல் பாடம் நடத்தி வருகிறார். இவர், அரசுப்பொதுத்தேர்வில் 100க்கு 100 மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை விமானப்பயணம் அழைத்து செல்வேன் என்று தனது மாணவர்களிடம் அறிவித்துள்ளார்.
அதன்படி தேர்வில் 100 மதிப்பெண் எடுத்தவர்களை தனது சொந்த செலவில் விமானத்தில் அழைத்துச் சென்றிருக்கிறார். ஆசிரியை செல்வகுமாரியின் முயற்சியை கல்வி அதிகாரிகள் பெரிதும் பாராட்டி வருகின்றனர்.இதுகுறித்து செல்வகுமாரி கூறியதாவது, வரைபடங்களில் விமான வழித்தடங்கள் குறித்து பாடம் எடுத்துக்கொண்டிருந்தபோதுதான் இப்படியொரு பரிசை அறிவித்தேன். இதனால் மாணவிகள் ஊக்கத்துடன் படிப்பார்கள் என எதிர்பார்த்தேன். கடந்த கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் என் வகுப்பில் ஒரே ஒரு மாணவி சரண்யா மட்டும் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றிருந்தார்.
அந்த ஆண்டு ஆறு மாணவிகள் 99 மதிப்பெண்கள் பெற்று அசத்தியிருந்தனர் என்று கூறியுள்ளார்.
100க்கு 100 மதிப்பெண் எடுத்தால் விமானத்தில் பறக்கலாம் -
Reviewed by Author
on
October 22, 2017
Rating:

No comments:
Post a Comment