சர்வதேச குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 5 பதக்கம்
சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவுக்கு ஒரு தங்கப்பதக்கம் உள்பட மொத்தம் ஜந்து பதக்கம் கிடைத்துள்ளது.
சர்வதேச குத்துச்சண்டை போட்டி பல்கேரியாவில் நடந்தது. இதில் பெண்களுக்கான 80 கிலோ எடைப்பிரிவில் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை லால் பாக்மாவ்லி ரால்டே 5-0 என்ற கணக்கில் உக்ரைன் வீராங்கனை ஜரினாவை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார். 57 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை பசுமட்டரி வெள்ளிப் பதக்கம் பெற்றார்.
மற்ற இந்திய வீராங்கனைகளான எம்.கே.தேவி மைசனம் (54 கிலோ), ஜோதி (64 கிலோ), நிர்மலா ராவத் ஆகியோர் வெணகலப் பதக்கம் வென்றனர்.
எலைட் பிரிவில் இந்தியாவுக்கு மொத்தம் 5 பதக்கம் கிடைத்தது.
சர்வதேச குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 5 பதக்கம்
Reviewed by Author
on
October 24, 2017
Rating:

No comments:
Post a Comment