தினமும் 6 பாதாம் சாப்பிடுங்க
6 பாதாமை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்துவிட்டு காலையில் சாப்பிடுவதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். அப்போதுதான் முழுமையான பலனை அனுபவிக்க முடியும்.
தினமும் 6 பாதாம் சாப்பிடுங்க
பாதாம் பருப்பில் உடலுக்கு நலம் சேர்க்கும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. வைட்டமின் ஈ, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீசியம், துத்தநாகம், நியாசின், செம்பு, செலினியம் போன்றவை இருக்கின்றன. அதனால் பல உணவு பதார்த்தங்களில் பாதாம் இடம்பெற்றிருக்கிறது. எனினும் பாதாமை அளவோடுதான் சாப்பிடவேண்டும். உடலுக்கு நன்மை சேர்க்கிறது என்பதற்காக அளவுக்கு மீறி சாப்பிட்டால் பக்கவிளைவுகளை ஏற்படுத்திவிடும். குறிப்பாக உடல் பருமனாகிவிடும்.
அதில் கலோரிகளும், கொழுப்பும் அதிகம் இருக்கிறது. ஆதலால் உடல் பருமன் பிரச்சினையை எதிர்கொள்பவர்கள் குறைவாகவே சாப்பிட வேண்டும். நம் உடலுக்கு சராசரியாக 15 மில்லி கிராம் வைட்டமின் ஈ சத்து தேவைப்படுகிறது. ஆனால் ஒரு கப் பாதாமில் 25 மில்லி கிராம் வைட்டமின் ஈ உள்ளடங்கி இருக்கிறது. அதனால் அளவுக்கு அதிகமாக பாதாம் சாப்பிட்டால் வயிற்று போக்கு, உடல் சோர்வு போன்ற பிரச்சினைகள் ஏற்படும். அதுபோல் தினமும் உடலுக்கு 10 மில்லி கிராம் மெக்னீசியம் போதுமானது.
ஆனால் பாதாமில் மெக்னீசியத்தின் அளவு அதிகம் என்பதால், அளவுக்கு மீறி சாப்பிட்டால் நரம்பு மண்டலத்துக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். அதிக பாதாம் சாப்பிட்டால் ஒவ்வாமை பிரச்சினையையும் உருவாகும். பாதாமுடன் காரமான உணவு பதார்த்தங்களை சேர்த்து சாப்பிடக் கூடாது. அப்படி சாப்பிட்டால் உடலில் நச்சுத்தன்மை உண்டாக வாய்ப்பிருக்கிறது. பாதாமை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்துவிட்டு காலையில் சாப்பிடுவதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். அப்போதுதான் முழுமையான ஆரோக்கிய பலனை அனுபவிக்க முடியும். தினமும் 6 பாதாம்கள் போதுமானது.
தினமும் 6 பாதாம் சாப்பிடுங்க
 
        Reviewed by Author
        on 
        
October 11, 2017
 
        Rating: 
      
 
        Reviewed by Author
        on 
        
October 11, 2017
 
        Rating: 


No comments:
Post a Comment