ஜப்பான்: 6 ஆண்டுகளுக்கு பின் புகைய தொடங்கியுள்ள சின்மோடேக் எரிமலை
ஜப்பானின் கியூஷூ தீவில் உள்ள சின்மோடேக் என்ற எரிமலை ஆறு ஆண்டுகளுக்கு பின்னர் புகைய தொடங்கியுள்ளது.
ஜப்பானின் கியூஷூ தீவில் கிரிஷிமா எரிமலைக் கூட்டத்தில் ‘சின்மோடேக்’ எரிமலை அமைந்துள்ளது. இது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் முன்பு உருவானதாக நம்பப்படுகிறது. 1716, 1717, 1771, 1822, 1959, 1991, 2008, 2009 மற்றும் 2011 ஆண்டுகளில் எரிமலை வெடிப்புகள் நிகழ்ந்ததாக பதிவாகியுள்ளது.
இந்த எரிமலை சமீபத்தில் ஜனவரி 19, 2011 அன்று புகையத் தொடங்கியுள்ளது. பிப்ரவரி 1 அன்று மிகப்பெரிய வெடிப்பொன்றில் வளிமங்கள், கற்கள் மற்றும் சாம்பலை வானில் விட்டெறிந்துள்ளது. இதன் தாக்கம் 8 கி.மீ (5 மைல்கள்) வரையிலும் சன்னல்களை உடைக்குமளவு இருந்தது.
இந்நிலையில், இந்த எரிமலை நேற்று மீண்டும் புகைய தொடங்கியுள்ளது. இந்த புகையும், சாம்பலும் வானில் சுமார் 300 மீட்டர் வரை பரவியதாக கூறப்படுகிறது. மேலும் வெடிப்பு ஏற்படும் பொழுது கட்டிடங்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படும் என கூறப்படுகிறது.
இதன் காரணமாக அப்பகுதிக்கு பொதுமக்கள் யாரும் செல்ல கூடாது என ஜப்பான் அரசு உத்தரவிட்டுள்ளது.
ஜப்பான்: 6 ஆண்டுகளுக்கு பின் புகைய தொடங்கியுள்ள சின்மோடேக் எரிமலை
Reviewed by Author
on
October 12, 2017
Rating:
Reviewed by Author
on
October 12, 2017
Rating:


No comments:
Post a Comment