அண்மைய செய்திகள்

recent
-

யாரெல்லாம் இஞ்சி சாப்பிடக் கூடாது?


இஞ்சி செரிமானத்துக்கு உதவும் ஒரு மருத்துவ மூலிகை என்றாலும் சில நேரங்களில் இதைத் தவிர்ப்பது நல்லது. யாரெல்லாம் இஞ்சி சாப்பிடக்கூடாது என்று பார்க்கலாம்.

யாரெல்லாம் இஞ்சி சாப்பிடக் கூடாது?
இஞ்சி... செரிமானத்துக்கு உதவும் ஒரு மருத்துவ மூலிகை. அதே நேரத்தில் வயிறு சார்ந்த பிரச்னைகளுக்கு நல்லதொரு மருந்தாகச் செயல்படும். என்றாலும், சில நேரங்களில் இதைத் தவிர்ப்பது நல்லது.

பொதுவாக, எல்லா மருந்துகளுக்குமே பக்கவிளைவுகள் இருப்பதுபோல, இஞ்சிக்கும் உண்டு. உண்மை... இஞ்சியை ஒருவர் அதிகம் உட்கொண்டால், இஞ்சியின் உறைதல் எதிர்ப்பின் காரணமாக வீக்கம், வயிற்றுப் பிரச்சனைகள், இதயப் பகுதியில் எரிச்சல் போன்றவை ஏற்படும்.

ஒரு நாளைக்கு 4 கிராமுக்கு மேல் சேர்க்கக் கூடாது என்றுகூட மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. ``பின்வரும் சில பாதிப்புகள் உள்ளவர்கள், உணவில் இஞ்சியைச் சேர்த்துக்கொள்ளாமல் இருப்பது உடல்நலனுக்கு நல்லது .

இஞ்சியிலிருக்கும் செரிமானத்துக்கு உதவும் சில சத்துகள் கர்ப்பிணிப் பெண்களுக்கு உகந்தது அல்ல. வயிறு சுருங்குதல் அல்லது குழந்தை குறைப்பிரசவத்தில் பிறக்க அது வழிவகை செய்யும். குறிப்பாக, பிரசவத் தேதி அருகிலிருக்கும் பெண்கள், இதைப் பயன்படுத்தவே கூடாது. காலைக் கடனில் சிக்கல் இருப்பவர்கள் மட்டும், மிகக் குறைந்த அளவில் சேர்த்துக்கொள்ளலாம்.



இது ரத்த ஓட்டத்துக்கு உதவி செய்யும் என்பதால், பிளட் டிஸ்ஆர்டர் (Blood Disorder) எனப்படும் ரத்தக்கோளாறு இருப்பவர்கள், இதைப் பயன்படுத்துவதை முற்றிலுமாகத் தவிர்ப்பது நல்லது. உதாரணமாக, சர்க்கரைநோய், உடல்பருமன், இதயக்கோளாறு, ரத்த ஒழுக்கு (Hemophilia) இருப்பவர்கள், ரத்தம் உறைதல் (Blood clotting) பிரச்னை உள்ளவர்கள் இதைத் தவிர்ப்பது நல்லது.

சர்க்கரைநோய், உயர் ரத்த அழுத்தம், பீட்டா - பிளாக்கர், இன்சுலின் எடுத்துக்கொள்பவர்கள், இதயக்கோளாறுகளுக்கு சிகிச்சை எடுப்பவர்கள், ரத்தம் உறைதல் போன்றவற்றுக்கான மருந்து எடுத்துக்கொள்பவர்கள், இதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். (பொதுவாக இது ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் என்றாலும், உயர் ரத்த அழுத்தத்துக்காக மருந்து உட்கொள்பவர்கள் சேர்த்தால், சீரற்ற நிலை ஏற்படும்.) மூலிகை சிகிச்சை எடுத்துக்கொண்ட ஒருவர் இஞ்சியைச் சேர்த்துக்கொண்டால், இஞ்சியின் தன்மை அதிகரிக்கத் தொடங்கும். அதனால், ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இந்த நிலை, ரத்தம் உறைவதை முற்றிலுமாகத் தடுத்து, ரத்தப்போக்கை ஏற்படுத்தும்.

பித்த நீர் சுரப்பதற்கு ஏதுவாக இருக்கும் என்பதால், பித்தப்பையில் கல் இருப்பவர்கள் இதைத் தவிர்க்க வேண்டும். முழுதாக இஞ்சியை இடிக்காமல்/ நசுக்காமல் சேர்த்துக்கொள்வது, குடலில் அடைப்பை ஏற்படுத்தும். அதனால் அல்சர் இருப்பவர்கள், இஞ்சியைத் தவிர்ப்பது நல்லது.

ஏதாவது ஒரு நோய்க்கான சிகிச்சைக்காக ஆபரேஷன் செய்யத் தயாராகும் நபர்கள், இஞ்சியை உணவில் சேர்க்கக் கூடாது. ஏனெனில், இஞ்சி அதிக ரத்தப்போக்கை ஏற்படுத்தக்கூடும். ஆகவே, ஆபரேஷனுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பிருந்தே இஞ்சியைத் தவிர்க்க வேண்டும்.

இஞ்சியில் இருக்கும் நார்ச்சத்துகள், வயிற்றில் பி.எச் நிலையை அதிகரிக்கும். மேலும், செரிமானத்துக்குத் தேவையான என்சைம்களை தூண்டியபடி இருக்கும். வயிற்றில் எரிச்சலை ஏற்படுத்தும். இது, விரைவாக உணவை செரித்துவிடும். இந்த நிலை தொடர்ந்தால், எடை இன்னமும் குறையத் தொடங்கும். கூடுதலாக, முடி உதிர்தல், மாதவிடாய்க் கோளாறுகள், தசைகளில் சத்துக் குறைதல் போன்றவை ஏற்படும்.

யாரெல்லாம் இஞ்சி சாப்பிடக் கூடாது? Reviewed by Author on October 22, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.