அண்மைய செய்திகள்

recent
-

உணர்வு சார்ந்த போராட்ட முன்னெடுப்புக்களும், தேசியத்திற்குரிய பணிகளும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்-வி.எஸ்.சிவகரன்-

சிவில் சமூக செயற்பாடுகள், செயற்பாடுகளை முன்னெடுக்கக்கூடிய ஜனநாயகம் என்று சொல்லி, அல்லது நல்லாட்சி என்று சொல்லி ஆட்சி மாற்றத்தின் பின்னர் இவ்வாறான அச்சுரூத்தல்கள் விடுக்கின்றமையானது நல்லாட்சி அரசாங்கம் தனது கையாளாகத்தன்மையை காட்டுவதாகவே எங்களுக்கு தெரிகின்ற என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ். சிவகரன் நேற்று வெள்ளிக்கிழமை(20) கொழும்பு பயங்கரவாத விசாரனைப் பிரிவினால் விசாரனைக்கு உற்படுத்தப்பட்டார்.

-தனது விசாரனை தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று சனிக்கிழமை(21) காலை 10 மணியளவில் மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தில் இடம் பெற்றது.
இதன் போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,,,,.

கொழும்பு பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினாரினால் இரண்டாவது தடவையாக விசாரனைக்கு அழைக்கப்பட்ட நிலையில் நேற்று (20) வெள்ளிக்கிழமை விசாரனைக்காக சென்றிருந்தேன்.

இதன் போது விசாரனையை மேற்கொண்டவர்கள் முற்றிலும் முரண்பாடான, பொருத்தப்பாடற்ற விடையங்களையும் விசாரனையின் போது முன் வைத்திருந்தார்கள்.

கடந்த வருடம் மாவீரர் தின நிகழ்வு அனுஸ்ரிக்கப்பட்டமை, அதனை தொடர்ந்து மே-18 முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நிகழ்வு நடாத்தியமை தொடர்பாகவும் விசாரனைகளை மேற்கொண்டனர்.

அதற்கு மாறாக நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராகவும், அரசாங்கத்தின் போக்கை நலிவு படுத்துகின்ற விடையமாகவும், விடுதலைப்புலிகளின் கருத்தியல் போக்கை வலுப்படுத்துகின்ற வகையிலும் பயங்கரவாதத்தினை தூண்டுகின்ற விதத்திலும் தொடர்ச்சியான செயற்பாடுகளும் கருத்து தெரிவிப்புக்களும் என்னால் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டி இருந்தனர்.

-பொலிஸ்மா அதிபரின் வேண்டுகைக்கு அமைவாக குறித்த விசாரனை மேற்கொள்ளப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

நான் அவர்களிடம் கேட்டிருந்தேன் 'கடந்த வருடத்திலும் சரி அதற்கு முந்திய வருடமும் சரி மாவீரர் தின நிகழ்வுகளும், மே 18 நிகழ்வுகளும் வடக்கு கிழக்கில் இடம் பெற்றது.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோர் விடுதலைப்புலிகளின் அடையாளங்களை தவிர்த்து இந்த நிகழ்வுகளை முன்னெடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்த சூழ்நிலையில் எனக்கு மட்டும் ஏன் இவ்வாறான விசாரனை நடத்துகின்றீர்கள்' என கேட்டதற்கு விசாரனைகளை மேற்கொண்ட பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் இருந்து எனக்கு எவ்வித பதிலும் கிடைக்கவில்லை.அவர்கள் மௌனமாகவே இருந்தார்கள்.

இந்த விசாரனையின் அடிப்படை எனக்கு புறிந்தது.வேண்டும் என்றே எனது செயற்பாட்டையும்,சிவில் சமூக செயற்பாட்டாளர்களின் செயற்பாட்டையும் அச்சுரூத்தும் விதமாகவும்,தொடர்ந்தும் செயற்படக்கூடாது என்கின்ற உள்ளக ரீதியான அச்சுரூத்தல்களுக்கு அமைவாகவே இந்த விசாரனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விசாரனைகளை அவர்கள் கடுமையான முறையில் மேற்கொள்ளவில்லை.

தொடர்ச்சியாக இவ்வாறு செயற்பாட்டால் தங்கள் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுவோம் என்றார்கள்.

மன்னார் மாவட்டத்தில் அரசுக்கு எதிரான மற்றும் அரசிற்கு அசௌகரியத்தை ஏற்படுத்துகின்ற எந்த விதமான நிகழ்வகளையும் மேற்கொண்டால் தாங்கள் சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார்கள்.

இதனை ஒரு மிறட்டளாகவே நான் பார்க்கின்றேன். ஏனெனில்; சிவில் சமூக செயற்பாடுகள்,செயற்பாடுகளை முன்னெடுக்கக்கூடிய ஜனநாயகம் என்று சொல்லி, அல்லது நல்லாட்சி என்று சொல்லி ஆட்சி மாற்றத்தின் பின்னர் இவ்வாறான அச்சுரூத்தல்கள் விடுக்கின்றமையானது அரசாங்கம் தனது கையாளாகத்தன்மையை காட்டுவதாகவே எங்களுக்கு தெரிகின்றது.

இதில் தமிழ் அரசியல் வாதிகளின் பங்கும் இருக்கின்றதோ? என்கின்ற சந்தேகமும் எனக்கு இருக்கின்றது.என்னிடம் விசாரனைகளின் போது கேட்டார்கள் அங்கிருக்கின்ற மக்கள் பிரதி நிதிகள் எல்லாம் மௌனமாக இருக்கின்ற போது நீங்கள் மட்டும் எதற்கு இவ்வாறான நிகழ்வுகளை முன்னெடுக்க வேண்டும் என்று என்னிடம் கேட்டார்கள்.

எனவே ஜனநாயாக ரீதியான செயற்பாடும்,ஜனநாயாக ரீதியான போக்கும்,எமது உணர்வு சார்ந்த போராட்ட முன்னெடுப்புக்களும், தேசியத்திற்குரிய பணிகளும் தொடர்ந்தும் எங்களினால் முன்னெடுக்கப்படும்.

4 ஆம் மாடியல்ல இவர்கள் எத்தனையாம் மாடிக்கு அழைத்தாலும் நாங்கள் அச்சப்பட்டோ அல்லது பயந்து கொண்டு போக மாட்டோம்.

இவர்களுடைய அனாவசிய விசாரனைகளை கண்டு சிவில் சமூக செயற்பாட்டாளர்களாகிய நாம் ஒதுங்கி விட மாட்டோம்.தொடர்ந்தும் எமது செயற்பாடுகளை முன்னெடுப்போம்.என அவர் மேலும் தெரிவித்தார்.
உணர்வு சார்ந்த போராட்ட முன்னெடுப்புக்களும், தேசியத்திற்குரிய பணிகளும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்-வி.எஸ்.சிவகரன்- Reviewed by NEWMANNAR on October 21, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.