வீணாக போன தரங்காவின் அதிரடி சதம்: இரண்டாவது போட்டியிலும் இலங்கை அணி தோல்வி
பாகிஸ்தான் அணியுடனான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இலங்கை - பாகிஸ்தான் அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் அரபு நாடுகளில் நடந்து வருகிறது.
முதல் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றிருந்த நிலையில் நேற்று இரண்டாவது போட்டி அபுதாபியில் நடைப்பெற்றது.டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்து விளையாடியது.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஜமான் 11 ஓட்டங்களிலும், அஹமது ஷெசாத் 8 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.பின்னர் வந்த வீரர்களும் சொற்ப ஓட்டங்களில் அவுட்டாக பாகிஸ்தான் அணி 101 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களை இழந்து தடுமாறியது.இதையடுத்து அசாமுடன், ஷபாத் கான் ஜோடி சேர்ந்து அணியை சரிவிலிருந்து மீட்க போராடினார். சிறப்பாக விளையாடிய அசாம் சதமடித்தார். அவர் 101 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
50 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 219 ஓட்டங்கள் எடுத்தது. ஷபாத் கான் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 52 ஓட்டங்கள் எடுத்தார்.</p><p>இலங்கை சார்பில் லயிரூ 4 விக்கெட்களையும், பெரேரா 2 விக்கெட்களை வீழ்த்தினார்கள்.
இதையடுத்து 220 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக நிரோஷன் டிக்வெல்லாவும், உபுல் தரங்காவும் களமிறங்கினர்.
பாகிஸ்தான் அணியினரின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் இலங்கை அணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஒருகட்டத்தில் இலங்கை 28.1 ஓவர்களில் 93 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து 7 விக்கெட்களை இழந்து தடுமாறியது. ஆனால் அணித்தலைவர் தரங்கா மட்டும் நிலைத்து நின்று விளையாடி சதமடித்தார். அவருடன் ஜெஃப்ரி வண்டர்சே ஜோடி சேர்ந்து அணியை சரிவிலிருந்து மிட்க போராடினார். வண்டர்சே 55 பந்துகளில் 22 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த வீரர்கள் சரியாக விளையாடாததால் இலங்கை அணி 187 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதனால் அந்த அணி 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.தரங்கா 112 ஓட்டங்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
வீணாக போன தரங்காவின் அதிரடி சதம்: இரண்டாவது போட்டியிலும் இலங்கை அணி தோல்வி
Reviewed by Author
on
October 17, 2017
Rating:

No comments:
Post a Comment