வவுனியாவில் விபத்து இருவர் படுகாயம்-Photo
வவுனியாவில் இன்று 25 காலை 6.30மணியளவில் தாண்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்த மேலும் தெரியவருகையில்,
வவுனியா தாண்டிக்குளம் இராணுவத்தினரின் உணவகத்திற்கு முன்பாக இன்று காலை 6.30மணியளவில் மூன்று முறிப்பு பகுதியிலுள்ள ஆடைத் தொழிற்சாலைக்கு பணியாளர்களை ஏற்றி வந்த இரு பேருந்துகளும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் அதில் பயணம் மேற்கொண்ட ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் இருவர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும் பேருந்தில் பயணித்த பலருக்கு சிறுகாயம் ஏற்பட்டுள்ளது. குறித்த ஆடைத் தொழிற்சாலைக்கு பணியாட்களை ஏற்றி வந்த இரு பேருந்தும் ஒன்றை ஒன்று முந்திச் செல்ல முற்பட்டபோதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியாவில் விபத்து இருவர் படுகாயம்-Photo
Reviewed by NEWMANNAR
on
October 25, 2017
Rating:

No comments:
Post a Comment