பொதுவெளியில் புகைபிடிக்க தடை: அமுலுக்கும் வரும் புதிய சட்டம்?
சுவிட்சர்லாந்தின் டிசினோ மாகாணத்தில் பொதுவெளியில் புகைபிடிப்பதற்கு தடை விதிப்பது தொடர்பில் விவாதிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>சுவிட்சர்லாந்தின் டிசினோ மாகாணத்தில், வீட்டின் மொட்டைமாடி, விளையட்டுத்திடல், ரயில் நிலையம் மற்றும் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் பகுதிகளில் புகைபிடிக்க தடை விதிக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
சுவிஸ் நாட்டினை பொறுத்தமட்டில் கடந்த 2010 ஆம் ஆண்டு முதற்கொண்டே மூடப்பட்ட அறைக்குள் புகைபிடிப்பதை தடை செய்திருந்தது. இது டிசினோ, ஜெனிவா உள்ளிட்ட முக்கிய மாகாணங்களில் பெரும் வரவேற்பை பெற்றதுடன், இருதய நோய் தொடர்பில் மருத்துவமனையை நாடும் மக்களின் எண்ணிக்கை சுமார் 20 விழுக்காடு சரிந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல் வெளியானது.
தற்போது இதன் அடுத்தகட்டமாக டிசினோ மாகாணத்தில் புகைபிடிப்பது தொடர்பில் முக்கிய பரிந்துரைகளை சமூக ஆர்வலர்கள் மாகாண நிர்வாகத்திற்கு முன்வைத்துள்ளதாக தெரிய வந்துள்ளது. அதன்படி இனிமேல் டிசினோ மாகாணத்தில் உள்ள மதுபான விடுதிகள் மற்றும் பிரபலமான உணவு விடுதிகளில் புகைபிடிக்க தடை விதிக்கப்பட்ட உள்ளது. மட்டுமின்றி பேருந்து நிலையத்திலும் புகைபிடிக்க தடை கோருவது குறித்தும் விவதித்து வருகின்றனர்.
சமூக ஆர்வலர்களின் இந்த பரிந்துரைகளுக்கு பொதுமக்களிடையே வரவேற்பும் எதிர்ப்பும் எழுந்துள்ளது. ஆனால் ஆரோக்கியத்தை பேணும் மனிதகுலம் கண்டிப்பாக குறித்த பரிந்துரைகள் சட்டமாக வகுப்பட்டால் ஏற்றுக்கொள்வார்கள் என சமூக ஆர்வலர்கள் குழு தெரிவித்துள்ளது.
பொதுவெளியில் புகைபிடிக்க தடை: அமுலுக்கும் வரும் புதிய சட்டம்?
Reviewed by Author
on
October 23, 2017
Rating:

No comments:
Post a Comment